Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் டயானா மரியம் குரியனான நயன்தாரா

ஜே.பி.ஆர்.
வியாழன், 19 நவம்பர் 2015 (15:37 IST)
நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். கேரளாவின் சிறியன் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமாவுக்காக வைக்கப்பட்ட பெயர்தான் நயன்தாரா.


 
 
மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் கால் பதித்து, தெலுங்கில் வெற்றிக்கொடியை பறக்கவிட்ட போதும் நயன்தாரா ஒரு சிறியன் கிறிஸ்தவராகத்தான் இருந்தார். இந்துவான சிம்புவை காதலித்த போதும் மதம் மாறவில்லை அவர்.
 
பிரபுதேவாவை அவர் காதலிக்க ஆரம்பித்ததும் நிலைமை மாறியது. படப்பிடிப்புக்காக செல்கிற ஊர்களில் பிரபலமான வழிபாட்டுத்தலங்கள் இருந்தால் தவறாமல் அங்கு செல்வது நயன்தாராவின் வழக்கம். அது இந்து கோவில்களாகயிருந்தாலும். பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்ததும், இந்தப் பழக்கம் வழக்கமாக மாறியது. தொடர்ச்சியாக இந்து கோவில்களுக்குப் போக ஆரம்பித்தார்.
 
பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் சினிமாவுக்கு முழுக்குப்போட நயன்தாரா தீர்மானித்த பின் கடைசியாக ஒப்புக் கொண்ட படம், ஸ்ரீ ராம ராஜ்ஜியம். பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படமான இதில் சீதையாக நயன்தாரா நடித்தார். படப்பிடிப்பு நடந்த நாள்களில் அசைவம் எடுக்காமல் முழு இந்துவாக படத்தில் ஈடுபாடுகாட்டினார். உச்சமாக நயன்தாரா என்று தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியதுடன், இந்து மதத்துக்கு மாறினார்.

 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

பிரபுதேவாவுடனான காதல் முறிந்த பிறகும் கோவில்களுக்கு செல்லும் வழக்கத்தை அவர் மாற்றவில்லை. உதயநிதியுடன் நண்பேன்டா படத்தில் நடித்த போது அவருடன் ஒன்றாக பழனிக்கு சென்றது தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம்.


 
 
இந்த நீண்ட பிளாஷ்பேக்கை நினைவுப்படுத்த காரணம், மீண்டும் கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. பிறந்தநாளை (பிறந்தநாளுக்கு முன்பே) மம்முட்டியுடன் புதிய நியமம் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியவர், குடும்பத்துடன் வாடிகன் சென்று போப்பிடம் ஆசி வாங்கியிருக்கிறார். அதனை நயன்தாராவின் அண்ணன் - துபாயில் இருப்பவர் உறுதி செய்துள்ளார்.
 
விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வரும் நிலையில், அவர் வாடிகன் சென்று போப்பிடம் ஆசிர்வாதம் வாங்கியது, நயன்தாரா மீண்டும் கிறிஸ்தவத்துக்கு திரும்பும் அறிகுறி என்கிறார்கள்.
 
இது போன்ற ஆரோகணங்களை அடித்து நொறுக்குவதாகத்தான் இதுவரையான நயன்தாராவின் செயல்பாடுகள் இருந்துள்ளன. இந்த விஷயம் எப்படியோ.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments