Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

இன்று வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

ஜே.பி.ஆர்

, வெள்ளி, 5 டிசம்பர் 2014 (08:45 IST)
லிங்கா வெளியாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இன்று வழக்கம்போல அதிகப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஒரே வாரத்தில் காணாமல் போய்விடுவோம் என்று தெரிந்தே திரைக்கு வந்திருக்கும் இந்தப் படங்கள் அனைத்தும், ஒருநாளோ இரண்டு நாளோ...  வெளிவந்தால் போதும் என்ற இக்கட்டில் மாட்டிக் கொண்டவை.
 
1 பந்து 4 ரன்கள் 1 விக்கெட் படம் இன்று வெளியாகியுள்ளது. கிரிக்கெட் பைத்தியமான ஹீரோவுக்கு திருமணம் நடக்கிறது. மனைவியுடன் தேனிலவுக்கு செல்லும் நாளில் பகல் இரவாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மனைவியை மறந்து மேட்சை பார்க்கிறான். இந்தியா ஜெயிக்க 4 ரன்கள் தேவை.

ஒரேயொரு பால்தான் இருக்கிறது. விக்கெட்டும் ஒன்றே. இந்த நேரத்தில் ஹீரோவுக்கு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து நடக்கும் திகில் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
 
இன்று வெளியாகியிருக்கும் இன்னொரு படம் ர. பிரபு யுவராஜ் இயக்கியிருக்ககும் இதுவொரு பேண்டசி திகல் படம். ஒரு கதவுதான் இந்தப் படத்தில் பேய். அஷ்ரம், அதிதி செங்கப்பா நடித்துள்ளனர்.
 
webdunia
13 ம் பக்கம் பார்க்க படமும் இன்று திரைக்கு வந்துள்ளது. புகழ்மணி இயக்கியிருக்கும் இந்தப் படமும் பேய் படம்தான். மர்ம புத்தகம் ஒன்றின் 13 ம் பார்க்கத்தை ஒருவர் படிக்க ஆரம்பித்தால் அவருக்கு பேயால் தொந்தரவுகள் ஆரம்பிக்கும். 
 
இவை தவிர பகடை பகடை, அழகிய பாண்டிபுரம், நாங்கெல்லாம் ஏடாகூடம், மணம் கொண்ட காதல், அப்பா வேணாம்பா, நட்பின் நூறாவதுநாள் ஆகிய நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அர்ஜுன் நடித்த கன்னட படம் பிரசாத் என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது.
 
ஹாலிவுட் ஹாரர் படமான ஜோம்பி பெல்லியை தமிழில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். கிளாடியேட்டர் போன்ற சிறந்த படங்களை இயக்கிய ரிட்லி ஸ்காட்டின் புதிய படம் எக்சோடஸ் இன்று வெளியாகி உள்ளது.
 
தமிழகத்திலும் இந்தப் படத்துக்ககு நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால் மல்டிபிளக்ஸில் படத்துக்கு கூட்டம் அம்ம வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil