Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலாவதியான கடவுள்கள், கல்லா கட்டும் பேய்கள்

காலாவதியான கடவுள்கள், கல்லா கட்டும் பேய்கள்

ஜே.பி.ஆர்.

, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (10:27 IST)
வணிக சினிமாவின் முக்கிய வியாபார மூலதனங்களுள் ஒன்று பக்தியும் கடவுளும். மத நம்பிக்கையில் ஊறிய பார்வையாளர்களை கவரும் வகையில் கடவுள்களின் மகிமையை சொல்லும் திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாவதுண்டு.


 
 
சினிமா சரித்திரத்தில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் அவதார். ஆங்கிலம் அல்லாத மொழிகளில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம், த பேஷன் ஆஃப் த க்ரைஸ்ட். மெல்கிப்ஸன் இயக்கிய அமெரிக்க தயாரிப்புதான் இதுவும். ஆனால் படத்தில் பேசப்பட்டது வழக்கொழிந்து போன அராமிக் மொழி. 
 
தொரியாத மொழியில் உருவான ஒரு படம் உலக அளவில் வசூலில் முதலிடத்தைப் பிடித்ததற்கு கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையே காரணம். 
 
பைபிள் கதைகள் ஹாலிவுட்டில் தொடர்ச்சியாக படமாக்கப்படுகின்றன. இந்த வருடம் பழைய ஏற்பாட்டில் வரும், நோவாவின் கதை படமாக்கப்பட்டது. ரஸல் க்ரோவ் நோவாவாக நடித்திருந்தார். தொலைக்காட்சியில் தொடராக வந்த பைபிள் கதைகள், சன் ஆஃப் காட் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. ஹெவன் இஸ் ஃபார் ரியல் படமும் மத நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வெளியானது. மேலும் பல படங்கள் தயாரிப்பில் உள்ளன.

webdunia


webdunia

தமிழில் இந்து மத நம்பிக்கையை அடிப்படையாக வைத்து படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அம்மன், ஆடிவெள்ளி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் ஒரு அம்மன் படமாவது வெளியாகும். டிசம்பர் மாதத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கென்றே ஐயப்பனின் புகழ் சொல்லும் படங்கள் வெளியாகும். நம்பினோர் கெடுவதில்லை பக்தி படத்தில் அன்று ஆக்ஷன் ஹீரோவாக இருந்த விஜயகாந்த் நடித்தார். ரஜினிக்கு ஸ்ரீராகவேந்திரர். கிறிஸ்தவ மத நம்பிகைகையை முன்னிறுத்தி அன்னை வேளாங்கண்ணி போன்ற எத்தனையே திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 

webdunia

 
 
படிப்படியாக இந்த பக்தி வியாபாரம் குறைந்து இன்று சுத்தமாக வழக்கொழிந்த நிலையை எட்டியுள்ளது. இந்த வருடம் பக்தியை மூலதனமாக்கி ஒரு படம்கூட வெளியாகவில்லை. அதேநேரம் கடவுள்களின் இடத்தை ஆவிகளும் பேய்களும் பிடித்துள்ளன. யாமிருக்க பயமே படத்தின் வெற்றிக்குப் பிறகு பேய் படங்களின் எண்ணிக்கை கோடம்பாக்கத்தில் சட்டென்று உயர்ந்துள்ளது. இன்று சாலிகிராமத்தில் நடக்கும் கதை விவாதங்களில் நாற்பது சதவீதம் ஆவி கதைகள்தான். 
 
அருந்ததி, சந்திரமுகி, முனி, காஞ்சனா படங்களின் வெற்றி சினிமாக்காரர்களை ஆவிகளின் பக்கம் ஈர்த்தது. யாமிருக்க பயமே அந்த ஆர்வத்தில் பெட்ரோலை ஊற்றியது. இந்த வருடம் யாமிருக்க பயமே, அகடம், இருக்கு ஆனா இல்லை ஆகிய படங்கள் பேய்களை மையப்படுத்தி வெளியாயின. முனி 3 கங்கா, நந்திவரம், ஆ உள்பட ஒரு டஜன் ஆவி படங்கள் வெளியாக உள்ளன. இந்த எண்ணிக்கை 2015 -இல் இரு மடங்காகும் என்கிறார்கள்.
 
ஹாலிவுட்டில் கனஜோ‌ராக நடக்கும் பக்தி வியாபாரம் தமிழில் தடைபட்டதன் மர்மம் என்ன? கடவுள் மீதான நம்பிக்கையும், அதனை மூலதனமாக்கி நடக்கும் பக்தி வியாபாரமும் தமிழகத்தில் நாளுக்குநாள் செழித்து வருகிற நிலையில் தமிழ் சினிமாவில் மட்டும் ஏனிந்த திடீர் தடங்கல்? பக்திப் படங்களின் பெருவாரி ரசிகர்களான பெண்களை தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் வீட்டிலேயே சிறை வைத்திருப்பதுதான் பக்திப் படங்கள் இல்லாமல் போனதற்கான காரணமா?
 
பக்தி இயக்குனர்கள் யோசிக்க வேண்டிய கேள்வி இது.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil