Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினி பாப்கார்ன் - இலக்கியவாதிகளிடமிருந்து விலகிய இயக்குனர் பாலா

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (17:17 IST)
இதுவா அதுவா தெரியாது
 
கமலை பிரிகிறேன் என்று கௌரவமாக அறிக்கைவிட்டு விலகிவந்துவிட்டார் கௌதமி. சில அரைகுறைகள்தான் இன்னும் அதிலிருந்து மீளாமலிருக்கின்றன. சொத்து தகராறா, சொந்தபந்த தகராறா என்று கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
துபாயில் கணவன், குழந்தைகளுடன் தேமே என்றிருக்கும் ஆஷா சரத்தை கமலுடன் கோர்த்துவிட்டவர்கள் இப்போது, ரம்யா கிருஷ்ணனையும் தெருவுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள். கமல், ரம்யா கிருஷ்ணனுக்கிடையில் உள்ள நெருக்கம் காரணமாகவே கௌதமி பிரிந்து சென்றார் என்று கற்பனைக்கு அப்பார்ப்பட்ட ஒரு வதந்தியை சில சில்வண்டுகள் பரப்பி வருகின்றன.
 
மக்களே... இந்த அக்கப்போரில் உங்க மூளையை தொலைச்சிடாதீங்க.

 
இலக்கியவாதிகளிடமிருந்து விலகிய இயக்குனர் பாலா
 
நான் கடவுள் படத்தில் ஜெயமோகன், அவன் இவன் படத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் என்று தனது படங்களில் இவர் அல்லது அவரை பயன்படுத்தி வந்தார் பாலா. தமிழ்கூறும் நல்லுலகுக்கு பாலாவைவிட அதிகம் பங்களிப்பு செலுத்தியவர்கள் ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும். ஆனால், அவர்களையும் மெத்தனமாகவே மீடியாவில் விமர்சித்தார் பாலா.
 
பாலாவின் புதிய படத்தில் இந்த இரண்டு இலக்கியவாதிகளும் இல்லை. அதற்குப் பதில் விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் ரமணகிரிவாசன் என்பவரை வசனம் எழுத வைத்திருக்கிறாராம் பாலா.
 
பாலாவின் படங்களுக்கு ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும் கொஞ்சம் அதிகம்தான். பாலா இப்படியே தொடர்வதுதான் அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது.
 
முடங்கிப் போனாரா முத்தையா?
 
சாதி பெருமிதத்தை படமாக்குகிறார் என்று கல் அடித்தாலும், முத்தையா படங்களால் கல்லா நிறைகிறது தயாரிப்பாளர்களுக்கு. அதனால், அவரது படத்தை தயாரிக்க நீண்ட க்யூ காத்திருக்கிறது. இப்படியொரு சூழலில் ஸ்டுடியோ கிரீனிடம் முத்தையா சிக்கிக் கொண்டதாக கூறுகிறது ஒரு கூட்டம்.
 
யார் கல்லா நிறைகிற மாதிரி படம் இயக்கினாலும், உடனே அட்வான்ஸ் தந்து பிடித்துப் போடுவது ஸ்டுடியோ கிரீனின் வழக்கம். அப்படித்தான் மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கும் அட்வான்ஸ் தந்தார்கள். அவர் அட்ரஸ் கோடம்பாக்கத்தில் உள்ளவர்களுக்கே மறந்துவிட்டது. 
 
சதுரங்க வேட்டை வெற்றி பெற்றதும் அதன் இயக்குனர் வினோத்துக்கு அட்வான்ஸ் தந்தார்கள். கார்த்தி இல்லன்னா சூர்யா என்று சொல்லியே காத்திருக்க வைத்தார்கள். இன்னும் வினோத்தின் இரண்டாவது படம் டேக் ஆஃப் ஆகவில்லை.
 
முத்தையாவும் இப்படியொரு முட்டுச்சந்தில் சிக்கியிருப்பதாக கிசுகிசுக்கின்றனர். உண்மையா பாஸ்...?
 
சூப்பர் ஸ்டார் மருமகளுக்கு எண்பது கோடியில் பங்களா
 
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா திருமணம் செய்திருப்பது, அப்பல்லோ மருத்துவ குழுமங்களின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபசேனாவை. திருமணத்துக்குப் பிறகு அப்பா, அம்மாவுடன் வசித்துவரும் ராம் சரண் தேஜா விரைவில் தனிக்குடித்தனம் செல்லவிருக்கிறார். அதற்காக 80 கோடியில் புதிய பங்களா தயாராகிறதாம்.
 
உபசேனாவின் ஐடியாபடி தயாராகும் இந்த காஸ்ட்லி பங்களாவின் வடிவமைப்பு முதல் வசதிகள்வரை உபசேனாதான் திட்டமிட்டு உருவாக்குகிறாராம். 
 
ராம் சரண் தேஜா தனது படங்களில் காசு பணம் எல்லாம் மாயை என்று பாடல் வைத்தால், ரசிகர்களே நம்பாதீங்க.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments