Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினி பாப்கார்ன் - ஜேம்ஸ் பாண்டையே ஹைஜாக் செய்த ஹேக்கர்கள்

சினி பாப்கார்ன் - ஜேம்ஸ் பாண்டையே ஹைஜாக் செய்த ஹேக்கர்கள்

ஜே.பி.ஆர்

, செவ்வாய், 16 டிசம்பர் 2014 (09:04 IST)
விவசாயத்தை விளம்பரப்படுத்தும் மலையாள நடிகர்கள்
 
தமிழ்நாட்டில் 3 நாள்கள் தொடர்ச்சியாக பந்த் நடத்தினால் கேரளாவில் காய்கறிகளின் விலை விஷம் போல் ஏறும். இங்கிருந்துதான் அவர்களின் தேவைக்கான பச்சைக் காய்கறிகள் முக்கால்வாசி செல்கின்றன. மழைக்கும், தண்ணிக்கும் பஞ்சமில்லாத தெய்வத்தின் சொந்த தேசத்துக்கு அந்நிய மாநிலத்திலிருந்து காய்கறிகள் வருவதை மலையாளிகளால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
 
மலையாளிகளே தங்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதாக பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மஞ்சு வாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படத்தில், தமிழ்நாட்டிலிருந்து வரும் ரசாயன உரம் போட்ட காய்கறிகளால் ஒரு மலையாள தலைமுறையே கெட்டுப் போவதாக காட்சிகள் இருந்தன. ரசயான உரம் போடாத காய்கறிகளை விளைவித்து மஞ்சு வாரியர் புரட்சி செய்வதுதான் அந்தப் படத்தின் கதையே.
 
இதில் நல்ல விஷயம், சினிமாவில் சொல்வதுடன் அங்குள்ள நடிகர்கள் நின்றுவிடுவதில்லை. மம்முட்டி சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அதேபோல் இயக்குனர், நடிகர், திரைக்கதையாசிரியரான சீனிவாசன். தனது வயலில் அறுவடையை தொடக்கி வைக்க அவர் மஞ்சு வாரியரை அழைத்திருந்தார். அவரும் அழைப்பை ஏற்று வந்து அறுவடையை தொடங்கி வைத்தார். இதேபோல் பல நடிகர்கள் நடிகைகள்.
 
பேனா, பென்சில் தரும் தமிழ் நடிகர்கள் இதேபோன்று இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கு சிக்கல்
 
webdunia
திருட்டு கும்பலால் ஹாலிவுட்டும் கலகலத்து போயுள்ளது. இயக்குனர் குயென்டின் டரண்டினோ, த ஹேட்ஃபுல் எய்ட் என்ற தனது புதிய படத்தின் கதை லீக் ஆனதால் அதனை ட்ராப் செய்து, ஒரு வருடம் கழித்து அதனை மீண்டும் ஆரம்பித்துள்ளார். 
 
அதேபோல் புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான, ஸ்பெக்டரின் கதையையும் ஹேக்கர்கள் திருடி உள்ளனர். சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலக கம்ப்யூட்டர்கள் சில தினங்கள் முன்பு ஹேக் செய்யப்பட்டன. அதில் ஸ்பெக்டரின் திரைக்கதையும் இருந்துள்ளது. ஹேக்கர்கள் எப்படியும் படத்தின் கதையை கசியவிடுவார்கள் என்பதால் சோனி நிறுவனம் ஆடிப்போயுள்ளது.
 
படத்தின் திரைக்கதைக்கு காப்பி ரைட் உள்ளது, மாட்டினால் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று சோனி காட்டியிருக்கும் பூச்சாண்டிக்கு ஹேக்கர்கள் பயந்து திரைக்கதையை வெளியிடாமல் இருப்பார்களா?

Share this Story:

Follow Webdunia tamil