Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காப்பி சர்ச்சையில் ஐஸ்வர்யாவின் வை ராஜா வை

ஜே.பி.ஆர்
செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (10:28 IST)
தமிழில் தயாராகும் படங்களில் எண்பது சதவீதம் பிற படங்களின் பாதிப்பில் எடுக்கப்படுபவை. சில அப்பட்ட காப்பிகள், சில புத்திசாலித்தனமான தழுவல்கள்.
 
காப்பி குறித்து எழுதி நமக்கே போரடித்துவிட்டதால், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கும், ஹாலிவுட், ப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் படத்துக்குமான பத்து பொருத்தங்களை நாம் பட்டியலிடவில்லை. மேலும், மணிரத்னத்தின் ஆத்மார்த்த குரு பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்களிலும் ஓ காதல் கண்மணியின் சாயலை காணலாம்.
 

 
நிற்க. விஷயம் ஓ காதல் கண்மணி பற்றியதல்ல. ஐஸ்வர்யாவின் இரண்டாவது படம், வை ராஜா வை ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. 2008 -இல் ஹாலிவுட்டில் 21 என்ற படம் வெளியானது. படத்தின் நாயகன் ஒரு ஸ்டூடண்ட். ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் படித்து டாக்டராக வேண்டும் என்பது அவனது கனவு. அதற்கு நிறைய டப்பு வேண்டும்.

இந்நிலையில் அவன் கணித பேராசிரியர் ஒருவரை சந்திக்கிறான். அவர் ஏற்கனவே சில மாணவர்களை தனது கணிதத் திறமையைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் கில்லாடிகளாக பயிற்சி அளித்து வைத்திருக்கிறார். ஹீரோவும் அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு, அனைவருமாக சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸுக்கு செல்கின்றனர். அங்கு தங்களது திறமையால் பணமும் வெல்கின்றனர். அதன் பிறகு எழும் பிரச்சனையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை.
 

 
இந்தப் படத்தை தழுவி வை ராஜா வை எடுக்கப்பட்டதாக தகவல். ஆனால், உண்மை என்ன? ஐஸ்வர்யா கதை விவாதம் நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக வை ராஜா வை கதையை உருவாக்கியதாகவும், 21 படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சூதாட்டத்தை மையப்படுத்தியது என்பதால் 21 படத்தை வேண்டுமென்றே இந்தப் படத்துடன் தொடர்புப்படுத்துகிறார்கள் எனவும் ஐஸ்வர்யா தரப்பு குற்றச்சாட்டை மறுக்கிறது.
 
மே 1 படம் வெளிவரும்போது எல்லா பொய் திரைகளும் விலகிவிடும். அதுவரை காத்திருப்போம்.

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

Show comments