Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினி பாப்கார்ன் - மோரும் பீராகும்டா...

சினி பாப்கார்ன் - மோரும் பீராகும்டா...
, செவ்வாய், 7 ஜனவரி 2014 (11:16 IST)
400 கோடியை நோக்கி தூம் 3

தூம் 3 வெளியான முதல் 15 தினங்களில் இந்தியாவில் 260.46 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. இந்திய சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை இதன் மூலம் தூம் 3 தட்டிச் செல்கிறது. உலக அளவில் வசூல் 385.18 கோடிகள். அமீர்கானின் கஜினி படம்தான் முதல் முதலில் 100 கோடியை (இந்திய அளவில்) தாண்டி வசூலித்தது. அவரின் 3 இடியட்ஸ் படம் முதல்முறையாக 200 கோடி எல்லையை கடந்தது. அதே படம்தான் உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
FILE

இப்போது தூம் 3 மூலம் சர்வதேச அளவில் 400 கோடியை கடந்த முதல் இந்திய படம் என்ற சாதனையையும் படைக்கயிருக்கிறது. இந்த சாதனையை தூம் 3 சாத்தியப்படுத்துமா என்பதுதான் பாலிவுட்டின் இப்போதைய எதிர்பார்ப்பு.
webdunia
FILE

ஹிந்தி சினிமாவின் கடந்த ஆண்டு வசூல் அபாரம் என்றாலும் வெற்று கமர்ஷியல் படங்களே இந்த வசூலை பெற்றன என்பதில் பலருக்கு வருத்தம். நல்ல படங்களில் பாக் மில்கா பாக் மட்டும் 100 கோடி வசூலித்தது. லஞ்ச் பாக்ஸ், டி டே, ஸ்பெஷல் 26 போன்றவை - வெற்றி பெற்றாலும் கமர்ஷியல் படங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான வசூலையே பெற்றன. தூம் 3 ஐவிட தூம் 2 சிறந்தது என்பதே தூம் பட ரசிகர்களின் கணிப்பாக உள்ளது. அடுத்த ஆண்டாவது இந்த நிலை மாறுமா?

சிக்சர் மழை பொழிந்த சேட்டன்கள்

இந்திய அளவில் அதிக படங்கள் தயாரிக்கும் மொழியாக தமிழ், தெலுங்கு அல்லது ஹிந்தியே இருந்து வந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மூன்று மொழிப் படங்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்து வந்த நிலையில் மாலையாளப் படங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.
webdunia
FILE

அதற்கெல்லாம் சேர்த்துப் பிடித்து இந்த வருடம் சிக்சராக தூக்கியிருக்கிறார்கள் சேட்டன்கள். மொத்தம் 158 படங்கள். நார்த் 24 காதம், ஆர்ட்டிஸ்ட், மெமரிஸ், 101 சோத்தியங்கள், கன்னியகா டாக்கீஸ், த்ரிஷ்யம், லெப்ட் ரைட் லெப்ட், மும்பை போலீஸ், அன்னாயும் ரசூலும், நத்தெலி செறிய மீனல்லா, செலுலாயிட், பாப்பிலியோ புத்தா, ஆமென், ஒரு இந்தியன் ப்ரணயகதா என்று சிறந்த படங்கள் ஒரு டஜனுக்கும் மேல் வெளியாயின. கடந்த ஐந்து வருடங்களில் இதுபோன்ற அமோக விளைச்சலை மலையாள சினிமா கண்டதில்லை.
webdunia
FILE

ஃபகத் ஃபாசில் நடிப்பில் மொத்தம் 12 படங்கள் வெளிவந்தன. ஒன்றிரண்டை தவிர அத்தனையும் ஹிட். வருடத்தின் தொடக்கத்தில் முதல் படமாக ஃபகத் ஃபாசிலின் அன்னாயும் ரசூலும் வெளியாகி மலையாள சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை நிறைத்தது. வருட இறுதியில் கடைசி படமாக வெளிவந்தது சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஃபகத் நடித்த ஒரு இந்தியன் ப்ரணயகதா. ஃபகத்தின் கேரியரில் இது மறக்க முடியாத சாதனை ஆண்டு.

என்றென்றும் கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமாரின் 25 வருட திரையுலக வாழ்க்கையை பாராட்டும் விதமாக ராஜ் தொலைக்காட்சி என்றென்றும் கே.எஸ்.ரவிக்குமார் என்ற பெயரில் விழா நடத்தியது. விழா நடந்தது நேரு உள்விளையாட்டரங்கம்.
webdunia
FILE

கமல், சரத்குமார், அர்ஜுன், சேரன், மனோபாலா என்று நட்சத்திர கூட்டம். அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. அவர் வருவாரா மாட்டாரா என்று கடைசிவரை இருந்த சந்தேகத்தை தனக்கேவுரிய ஸ்டைலில் வராமல் வந்து கலக்கிவிட்டார். எப்படி? வீடியா கான்பரன்ஸிங் மூலம் வீட்டிலிருந்தே பேச வேண்டியதை சொல்லிவிட்டார் சூப்பர்ஸ்டார். இதில் அதிக வருத்தம் ராஜ் தொலைக்காட்சிக்கு.
webdunia
FILE

ரஜினி, கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பண்டிகை தினத்தில் ஒளிபரப்பினால் கொட்டப் போவது கோடிகள் அல்லவா. ரஜினி தந்த கான்பரன்ஸ் அல்வா அவர்களுக்கு அவ்வளவு இனிப்பாக இல்லை. இப்படி சொல்ல காரணம் இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் தனது முதல் படம் புரியாத புதிரை இயக்கியது 1990 ல். அதாவது அவர் திரையுலகில் நுழைந்து 23 வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் 25 வது ஆண்டு விழாவை கொண்டாட என்ன அவசரம் ராஜ் தொலைக்காட்சிக்கு? ரஜினியின் வீடியோ கான்பரன்ஸிங் பேச்சால் நினைத்ததில் முக்கால் கிணறையே ராஜ் தொலைக்காட்சியால் தாண்ட முடிந்தது.

மோரும் பீராகும்டா

இந்த வரியை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. பாண்டிய நாடு படத்தில் காதல் கைகூடிய மகிழ்ச்சியில் தீயதும் காதல் வந்தால் நல்லதாகும் என்ற பொருளில் ஹீரோ பாடும் பாடல். ஒத்தகதை ஒத்தகதை மச்சான்... இந்தப் பாடலில் வரும் ஒரு லைன், நாரும் பூவாகும்டா... மோரும் பீராகும்டா... நார் பூவாகும் சரி அதென்ன மோர் பீராகும்?
webdunia
FILE

மோர் பீரைவிட அவ்வளவு மோசமானதா? டாஸ்மாக் மோரை மோசமானதாகவும், பீரை உசத்தியானதாகவும் மாற்றிய மர்மத்தைவிட அதை கேள்வி கேட்காமல் பாடிக்கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கும் மனோநிலை அதிர்ச்சியானது. வெறும் பாட்டுத்தானே என்று இருந்தால் நாளை, லவ்வும் ரேப்பாகும்டா என்று எழுதுகிற சூழல் உருவாகாது என்று என்ன நிச்சயம்?

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil