Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவான் - திரைக்கதையால் வந்த தோல்வி

Webdunia
திங்கள், 12 மார்ச் 2012 (17:15 IST)
ச‌ரித்திரப் படம் என்றால் அந்தத் திரையரங்கு பக்கமே பலரும் போவதில்லை. மூன்று காரணங்கள்.

1. பொட்டல்வெளி, ஓலைக் குடிசைகள், அதில் பத்து பதினைந்து சட்டிப் பானைகள், திண்ணையில் தூங்கும் கிழவிகள் என்று எந்த ஃபிரேமிலும் இவர்கள்தான் செட் பிராப்பர்ட்டி.

2. பழந்தமிழ் பேசுகிறோம் என்று கோவைத் தமிழும் இல்லாமல் நெல்லைத் தமிழும் இல்லாமல் ஒரு நடுவாந்திர தமிழில் படம் நெடுக வறுப்பார்கள். காது தீயும்.

3. கஞ்சி போட்டு வெளுத்த துணியில் தூங்கி எழுவார்கள். பொட்டல் வெளியில் இவர்கள் உடையில் மட்டும் பொட்டு அழுக்கு இருக்காது. நாடகம் தோற்றுவிடும்.

ஆனால் அரவானைப் பார்க்க இது எதுவும் தடையாக இருக்கவில்லை. வசந்தபாலன், காவல்கோட்டம், சாகித்ய அகாதமி, 18ஆம் நூற்றாண்டு என பல காரணங்கள். தியேட்டர் - முதல்நாள் - நிரம்பிவிட்டது.

பலரும் பயந்த மேலே உள்ள மூன்று காரணங்களையும் வசந்தபாலனும் அவரது டீமும் ஓரளவு திறமையாகவே கடந்திருந்தார்கள். பாளையக்கார அரசருக்குக்கூட ஆடம்பரமான ஆனால் அப்படி தெ‌ரியாத உடை. அந்தப்புர அரவாணி முதல் கூத்துக்கார‌ரின் சற்றே பெ‌ரிய கோவணம் வரை எல்லாமே பார்த்து செய்திருக்கிறார்கள். பரத்துக்கு மட்டும் அபோகலிப்டோ ஆதிவாசியைப் போலொரு கெட்டப். ஊர் ஊராக அத்தர் விற்பதால் இருக்கலாம். இன்னொரு நெருடல் தாசியின் உடை. இன்றைய மயிலாப்பூர் மாமியை பார்ப்பது போலிருக்கிறது. இன்னொரு ஆச்ச‌ரியம் நடிகர்களின் திராவிட கலர். பொறுக்கி எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. பற்களில் மஞ்சளையும், சிவப்பையும் ஒருத்தர் பாக்கியில்லாமல் தீ‌ட்டியிருக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டில் பல் விளக்க மாட்டார்கள் என்று எங்காவது சு.வெங்கடேசன் வாசித்திருக்கலாம்.
WD

ச‌ரித்திரப் படங்களை ச‌ரித்திரப் படங்களாக்குவது ஒளிப்பதிவும், இசையும். அரவானில் பாதி இரவுக் காட்சி. யதார்த்தமா காட்டுறேன் என்று திரையை முழு இருட்டாக்கவும் கூடாது, அதேநேரம் பார்வையாளனுக்கு தெ‌ரியாமல் போகக் கூடாது என்று பகல் 12 மணி வெளிச்சத்திலும் எடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையை அழகாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஆனால், அட போட வைக்கிற கேமராக் கோணமோ, ஒளிப்பதிவோ இல்லை. காலை வெயிலுக்கும், சாயங்கால வெயிலுக்குமே ஆறு வித்தியாசங்கள் உண்டு. அதையெல்லாம் எப்போது தமிழ்ப் படமொன்றில் பார்க்கப் போகிறோமோ.

நிலா பாடல்தான் ஒஸ்தி என்று பலரும் சொன்னாலும் மற்றப் பாடல்கள்தான் படத்தின் தன்மைக்கு பொருந்தி வருகின்றன. நிலா படத்துக்கு பொருந்தாத ஃபேண்டஸி. தூங்கிக் கொண்டே தவில் வாசித்த மாத ி‌ ர ி அவ்வப்போது காட்சியிலிருந்து நழுவிச் செல்கிறது பின்னணி இசை. அதேபோல் சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளில் செண்டை முழுக்கம் கேட்கிறது. உண்மையில் அது செண்டைதானா, இல்லை அதுபோன்று ஒலிக்கும் தமிழர்களின் ஏதேனும் இசைக்கருவியா?

நடிப்பைப் பொறுத்தவரை ஆதியின் ஆஜானுபாகுவான உடம்பே பாதி வேலையை செய்துவிடுகிறது. பசுபதி களவாணி வேடத்தில் கச்சிதம். க‌ரிகாலன்தான் நெருடல். அறிமுகமான படத்திலிருந்து ஆணகழன் போட்டிக்கான மேடையில் நிற்பது போல தம் கட்டிதான் நிற்கிறார்... நடக்கிறார்... யாராவது அவரை அந்த மேடையில் இருந்து இறக்கிவிட்டால் நல்லது.

மற்ற ச‌ரித்திரப் படங்களுடன் ஒப்பிடுகையில் அரவானின் கதை சுவாரஸியமானது. கிராமம் ஒன்றில் ஒருவன் கொல்லப்படுகிறான். செத்தவனையும் தெ‌ரியாது கொன்றவனையும் தெ‌ரியாது. பிறகுதான் செத்தவன் அந்த ஊருடன் பல தலைமுறைகளாக பகைமை பாராட்டும் ஊரைச் சேர்ந்தவன் என்று தெ‌ரிய வருகிறது. இரண்டு ஊர்களுக்கும் பெ‌ரிய யுத்தமே வெடிக்கிற சூழ்நிலை. மோதலை தவிர்க்க வரும் பாளையக்கார அரசர், செத்துப் போனவனுக்கு பதிலாக மற்ற கிராமத்தை‌ச் சேர்ந்த ஒருவனை பலியாக தர வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பை வழங்குகிறார். சண்டை நடந்தால் பல தலைகள் உருளும் என்பதால் ஒத்துக் கொள்கிறார்கள். பலியாக ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான்.

பலி நாள் நெருங்கும் போது, யாரோ செய்த கொலைக்கு நாம பலியாக வேண்டுமா என்று பலியாளுக்கு வெறுப்பு தட்டுகிறது. உண்மையான கொலையாளியை துப்பு துலக்க ஆரம்பிக்கிறான். கடைசியில் கொலையாளி யார் என்பதையும் கண்டு பிடிக்கிறான். துரதிர்ஷ்டவசமாக கொலையாளி ஆற்றோடு போக, பலியாளும் படுகாயமடைகிறான். பலி கொடுக்கும் நாளில் அவனால் ஊருக்கு செல்ல முடியாமல் போகிறது.

பலியாள் ஓடிப் போனதாக நினைக்கும் ஊர்க்காரர்கள் அவனுக்குப் பதில் அவன் நண்பனை பலி கொடுக்கிறார்கள். நண்பனின் சாவுக்கு பலியாள் ஓடிப்போனதுதான் காரணம் என்பதால் அவனை நண்பனின் மகனின் கையால் சாகடிக்க வேண்டும் என்று சபதமும் செய்கிறார்கள். சில நாட்கள் கழிந்து பலியாள் ரகசியமாக வீடு திரும்புகிறான். ஊர்க்காரர்கள் அவனை பலியிடாமல் இருக்க பத்து வருடங்கள் தலைமறைவாக இருக்கும்படி அவனது மாமா அறிவுறுத்துகிறார். பத்து வருடங்கள் கழிந்தால் ஒருவனை பலியிடக் கூடாது என்பது ஊர் வழக்கம். உயிர் ஆசையில் பலியாளும் தலைமறைவாகிறான். ஒன்பது வருடங்களை வெற்றிகரமாக கடத்தும் அவன் துரதிர்ஷ்டவசமாக எத ி‌ ரி கையில் சிக்கி கடைசியில் உயிரை விடுகிறான்.

சந்தேகமில்லாமல் இதுவொரு நல்ல த ்‌ ரில்லர். குறைவில்லாத கலை இயக்கம், காஸ்ட்யூம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, கதை எல்லாமிருந்தும் அரவான் நிறைவான அனுபவத்தை தந்ததா என்றால், இல்லை. உணர்வேயில்லாத நிகழ்வுகளின் தொகுப்பாகிப் போன திரைக்கதையும், களவு பற்றிய காட்சிகளின் திணிப்பும் நல்ல அனுபவத்தை தர தவறிவிட்டன.

மேலே உள்ள கதையில் படத்தில் பாதியை ஆக்கிரமிக்கும் பசுபதிக்கு என்ன வேலை? பசுபதியுடனான நட்பு காரணமாக ஆதி தான் யார் என்ற உண்மையை வெளியிடுகிறான். அப்போது க‌ரிகாலனும் அவனது ஆட்களும் ஆதியை பிடித்துக் கொள்கிறார்கள். இந்த சின்ன விஷயத்தைத் தவிர பசுபதி கேரக்டருக்கான தேவையே படத்தில் இல்லை. ஆதி பிடிபடுவதற்கான காரணத்தை உருவாக்க பாதி படத்தை செலவிட்டிருக்கிறார்கள். ஒருவேளை களவு பற்றிய காட்சிகள் சுவாரஸியமாக இருக்கும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். ஆனால் கதைக்கு பொருந்தக் கூடிய காட்சிகள்தான் சுவாரஸியமே தவிர கதைக்குப் பொருந்தாத விஷயம் எவ்வளவு சுவாரஸியமாக இருந்தாலும் அது படத்தை காலி செய்துவிடும். அதுதான் அரவானிலும் நடந்திருக்கிறது.
WD

அரவான் தமிழ் சினிமாவின் மரபான கதை. வசந்தபாலனும் ஒரு மரபான கதைச் சொல்லி. இது போன்ற படங்களில் கதாபாத்திரகளின் உணர்வுக்கு மிக நெருக்கத்தில் ரசிகனை கொண்டு செல்வதுதான் இயக்குன‌ரின் திறமையாக இருக்க முடியும். இந்த விஷயத்தில் வசந்தபாலன் மோசமாக தோற்றிருக்கிற ா‌ ர ். நிகழ்வுகளின் தொகுப்பாக அவர் உருவாக்கியிருக்கும் திரைக்கதை படத்துடன் பார்வையாளன் ஒன்றுவதை முடிந்தவரை தடுக்கிறது.

படத்தின் முதல் முப்பது நிமிடங்களுக்குள் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்பது இதுபோன்ற திரைப்படங்களின் முதல்விதி. படத்தின் இறுதிக் காட்சியில் திடீரென ஒருவரை அறிமுகப்படுத்தி, முதல் காட்சியில் நடந்த கொலைக்கு இவர்தான் காரணம் என்பது சுவாரஸியத்தை குறைத்துவிடும் என்பதுடன் படத்துக்கு ஒரு அமெச்சூர்த்தனத்தையும் தந்துவிடும். அரவானில் இடைவேளைக்குப் பிறகே புதிய புதிய கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் முளைத்து வருகின்றன.

கதையை நகர்த்துவதற்கு தேவைப்படுவதை தேவைப்படுகிற நேரத்தில் திணித்திருக்கும் சொதப்பலான திரைக்கதை அரவானின் முதல் மைனஸ் என்று சொல்லலாம். இதன் காரணமாக கதையின் ஆபூர்வமான கணங்கள் சாதாரண வெற்றுக் காட்சிகளாக கடந்து செல்கின்றன. உதாரணமாக இறுதிக்காட்சியில் ஆதியை கொலை செய்ய அவரது நண்பனின் மகனின் கையில் அ‌ ரிவாள் தரப்படுகிறது. தனது தோளில் போட்டு வளர்த்த குழந்தையே தன்னை கொலை செய்ய வருவது காவிய தருணம். அதை முடிந்த அளவுக்கு மோசமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆதியும், அவரது நண்பரும் ஊ‌ ரியில் இணைந்து இருக்கும் காட்சிகள் கணிசமாக வருகின்றன. ஆதிக்கும், அவரது நண்ப‌ரின் மகனுக்குமான உறவை, அன்பை அந்தக் காட்சிகளில் ஊடுபாவாகச் சொல்லியிருந்திருந்தால் இறுதிக் காட்சியில் அதே பையன் அ‌ ரிவாளுடன் வரும் போது பார்வையாளனின் மனம் துணுக்குற்றிருக்கும். பதிலாக மச்சினிச்சி போன்ற மலிவான காமெடியில் காட்சிகளை கரைத்துவிட்டு கிளைமாக்ஸில் அ‌ ரிவாளுடன் வரும் போது மட்டும் சில நொடிகள் ஆதி அந்த சிறுவனை தூக்கி வைத்திருக்கும் காட்சியை காட்டுகிறார் இயக்குனர். துணுக்குறுவதற்குப் பதில் இதென்னடா புதுக்கதை என்று மனம் ப‌ரிதாபம் கொள்கிறது.

இதேபோல், சில நாட்களில் பலியாகப் போகிறார் என்று தெ‌ரிந்தும் ஆதியை மணமுடிக்க தன்ஷிகா மேற்கொள்ளும் துணிச்சல், பசுபதியின் தங்கை ஆதியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கெஞ்சும் இடம் என உணர்வுபூர்வமான தருணங்கள் எல்லாம் காயடிக்கப்பட்டுள்ளன. தன்ஷிகாவுக்கும், ஆதிக்குமான காதல், நெருக்கம் படத்தில் காட்டப்படவேயில்லை. நிலா பாட்டோடு ச‌ர ி. அப்புறம் எப்படி ஆதிக்காக தன்ஷிகா அழும்போது பார்வையாளனால் அவ‌ரின ் சோகத்தை உணர முடியும்? அதுபோல் பசுபதியின் தங்கைக்கு ஆதியின் மேல் காதல் இருப்பதாக காட்சியோ, சம்பவமோ படத்தில் இல்லை. திடீரென வந்து காதல், திருமணம் என்று அழும் போது பார்வையாளன் வெறுமனே வேடிக்கை பார்க்கிறான்.

இதனை இன்னும் தெ‌ளிவாகப் ப ு‌ ரிந்து கொள்ள தமிழில் திரைக்கதைக்காக கொண்டாடப்படும் ரோஜ ா, தேவர்மகன் படங்களை‌ப் பார்ப்போம். கணவன் கடத்தப்பட, அவனை போராடி மீட்கும் மனைவியின் கதைதான் ரோஜாவின் ஒன் லைன். மனைவியின் போராட்டத்துடன் பார்வையாளன் ஒன்ற வேண்டுமென்றால் கணவன், மனைவி இருவருக்குமான அன்னியோன்யத்தை இயக்குனர் அழுத்தமாக சொல்ல வேண்டும். அதனை எப்படி இயன்குனர் உருவாக்கியிருக்கிறார் என்று பார்ப்போம்.

அக்காவுக்குப் பதில் தன்னை திருமணம் செய்து கொண்டார் என்று நாயகிக்கு நாயகன் மீது கோபம். இதனால் அவனுடன் ஒட்டாமல் இருக்கிறாள். நாயகன் ஒருகட்டத்தில் உண்மையைச் சொல்ல, நாயகிக்கு அவன் மீது காதல் பீறிடுகிறது. வேலை நிமித்தமாக இருவரும் காஷ்மீர் கிளம்பிச் செல்கிறார்கள். அந்த இரவில்தான் அவர்கள் உடல ்‌ ‌ ரீதியாக ஒன்றிணைகிறார்கள். அதன் உச்சமாக பாடல் காட்சி வருகிறது. விடிந்தால் நாயகன் கடத்தப்படுகிறான். நாயகி பதறிப் போகிறாள். ஊடல், காதல், தொடர்ந்து டூயட் என்று அவர்கள் பந்தத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றததால்தான் நாயகன் கடத்தப்படும்போது நாயகியுடன் சேர்ந்து பார்வையாளனும் பதறுகிறான். அவர்கள் இணைய வேண்டும் என அவனது மனம் ஆவல் கொள்கிறது.

தேவர்மகனில் கௌதமியுடனான கமலின் காதல், இருவரும் இப்போதே கணவன் மனைவிதான் என்றளவுக்கு காட்டப்படுகிறது. அதனால்தான் கௌதமி திரும்பி வரும்போது கமலுக்கு திருமணம் முடிந்த விஷயம் அவருக்கு‌த் தெ‌ரியவரும் முன்பே பார்வையாளன் ஒருவித பதற்றத்துக்கு ஆளாகிறான்.

படிப்படியாக ஒரு நிகழ்வை மலரச் செய்யும் இந்த கலாபூர்வமான அணுகுமுறை அரவானில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களும் - உதாரணம் தாசி - நிகழ்வுகளும் திடீர் திடீரென வந்து போகின்றன.
WD

இந்தக் காட்சிகள் என்றில்லை. படத்தின் டெம்போவை அதிக‌ரிக்கக்கூடிய த ்‌ ரில்லருக்க ு‌ ரிய ஏ‌ ரியாவையும் இயக்குனர் திறமையாக வீணடித்திருக்கிறார். உதாரணமாக பசுபதிக்கு ஆதி மீது சந்தேகம் துளிர்க்கும் இடம். எவ்வளவு அற்புதமாக கையாள வேண்டிய பகுதி. ஆனால் பசுபதி தனது மனைவியிடம் அவங்கிட்ட ஏதோ ரகசியம் இருக்கு என்று சொல்வதோடு கத்த‌ரித்துவிடுகிறார் இயக்குனர். அதேபோல் அத்தர் விற்பவனை யார் கொலை செய்தது என்று துப்பறியும் பகுதி. சிங்கம்புலி கதைக்கு தேவைப்படும் போது பாதி ராத்த ி‌ ரியில எழுந்து போயிட்டேன், கூத்தாடிங்க வந்தாங்க, செத்தவன் கையில் அரைஞாண் கொடி இருந்திச்சி என்று தவணை முறையில் துப்பு கொடுக்கிறார். அரைஞாண் கொடி யாருடையது என்பதையாவது சுவாரஸியமாக துப்பு துலக்குகிறாரா என்றால் அதுவுமில்லை. திடீரென்று தாசி ஆதியின் இடுப்பில் அரைஞாண் கொடியை சுற்றி அதைத் தடவிப் பார்த்து ஆளை அடையாளம் சொல்கிறாள். அவள் தாசி என்பதை காண்பிக்க கதைக்கு நடுவில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடல். கொடுமை.

அத்தர் விற்பவனால் அத்தனை அசட்டையாக அந்தப்புரத்தில் நுழைய முடியுமா, அவனைக் கொல்ல ஆளும், படையும் உள்ள அரசர் தனியாக நடுராத்த ி‌ ரி ஊருக்குள் வருவாரா என்பதான பல கேள்விகளை கேட்க முடியும். ஆனால் அரவானைப் பொறுத்தவரை இந்த லா‌ஜிக் ஓட்டைகளைவிட ஒரு நிகழ்வை எப்படி கலாபூர்வமாக திரைக்கதையின் மூலம் ரசிகனுக்கு நெருக்கத்தில் கொண்டு செல்வது என்பதில் திரைக்கதையாச ி‌ ரியருக்கு ஏற்பட்ட தோல்விதான் கவலைக்க ு‌ ரியது. உண்மையில் இந்த ரஸவாதம்தான் ஒரு இயக்குனரை க ்‌ ரியேட்டாராக மாற்றுகிறது. மாறாக பல்லுக்கு பெயின்ட் அடிப்பதோ, உடம்புக்கு க‌ர ி பூசுவதோ, ராப்பகலாக உழைப்பதோ அல்ல. அந்த வகையில் க ்‌ ரியேட்டருக்கான இடத்தில் வசந்தபாலன் கண்டிருப்பது முழுமையான தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

இதுவரை யாரும் சொல்லாத கதையை சொல்லியிருக்கிறார்கள், 18ஆம் நூற்றாண்டை அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள், கடினமாக உழைத்திருக்கிறார்கள், மற்ற கமர்ஷியல் குப்பைகளுக்கு இது எவ்வளவோ தேவலை என்பதான பாராட்டுகள் எல்லாம் அரவானுக்கு எவ்வித வலிமையும் சேர்க்கப் போவதில்லை. காலம் அவற்றை வெற்று வார்த்தைகளாக்கிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments