காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள்.
அந்தகாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவர் பைரவர். சிவபெருமா னுடைய 64 வடிவங்களில் ஒரு வராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார்.
சனீஸ்வரரின் குரு, பைரவர் என் பதால் பைரவரை வணங்கினால் சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வேண்டினால் தடைகள் தகர்க்கப்பட்டு வாழ்வில் நிம்மதி கிடைக்கும். பைரவருக்கு மிளகு கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது மிகவும் சிறப்பானது.
பைரவருக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொண்டால் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.
காலபைரவரை வழிபட்டால் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி விடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும். வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.