Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பானது ஏன்...?

Webdunia
துளசியின் இலைகள் விஷ்ணுவின் வடிவம் ஆகும். அதனால் வீட்டில் துளசி செடி வைத்து வழிபட்டால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்வில் ஏற்றம்  உண்டாகும்.

மேலும் மருத்துவ ரீதியாக துளசி செடி இலையானது காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல நோய்களை குணப்படுத்துவதாக அறியப்படுகிறது. ஆகையால் துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
 
துளசி இலையின் நுனிப்பகுதியில் பிரம்மனும், அடிப்பகுதியில் சிவபெருமானும், நடுவில் நாராயணனும் வசிக்கிறார்கள்.
 
இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இந்துக்கள் துளசி செடி முன், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். துளசி விவா  என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்த பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவை பிரதிபலிக்கும் சாளக்கிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள்.
 
துளசித் தீர்த்தமானது கங்கைக்கு நிகரானது, அதனால்தான் மும்மூர்த்திகளும், தேவர்களும் துளசியில் வாசம் செய்கிறார்கள். பெண்கள் துளசி மாடம் வைத்து, தினமும் பூஜை செய்து வந்தால், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments