Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஏன் செய்யப்படுகிறது...?

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:36 IST)
ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷங்கள் உண்டு. அமாவாசைக்கு முன்னதாக மூன்றாம் நாளில், பிரதோஷம் வரும். அதேபோல, பெளர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாக பிரதோஷம் வரும்.


மாதந்தோறும் வருகிற இரண்டு பிரதோஷத்தின் போதும், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். முக்கியமாக அன்றைய தினத்தில், பிரதோஷ நாயகன், சிவாலயத்தில் கொடிமரத்துக்கு அருகில் இருக்கும் நந்திதேவர்தான். அன்றைய நாளில், நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.

பிரதோஷ காலம் என்பது 16.30 முதல் 18.00 மணி வரை. இந்தக் காலத்தில்தான் பூஜைகள் நடைபெறும். பிரதோஷத்தன்று சிவபூஜையில் கலந்து கொண்டு தரிசிப்பதும் சிவநாமம் சொல்லி வழிபடுவதும் பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

பிரதோஷநாளில் விரதம் மேற்கொண்டு சிவ பூஜை செய்வார்கள் சில பக்தர்கள். மாத சிவராத்திரிக்கு  விரதம் மேற்கொள்வது போல், பிரதோஷத்திலும் விரதம் மேற்கொள்வார்கள்.

வியாழக்கிழமை (28.04.2022) பிரதோஷம். குரு வார பிரதோஷம். 16.30மணிக்கு மேல் 18.00மணிக்கு முன்பு வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவனாரை நினைத்து பூஜை செய்யுங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்வதும், பாயசம் நைவேத்தியம் செய்வதும் விசேஷம்.

பிரதோஷ நாளில், பசுவுக்கு உணவளிப்பதும் அகத்திக்கீரை வழங்குவதும் வீட்டு தரித்திரத்தை விலக்கும். கடன் முதலான பிரச்சினைகள் தீரும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments