Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பிறப்பு வரையில் ஒவ்வொரு மாதமும் வணங்கவேண்டிய தெய்வங்கள் என்ன...?

Webdunia
வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையில் (10 மாதங்கள்) அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை  வணங்குவது சிறப்பு.
முதல் மாதம்: கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம்.
 
2-வது மாதம்: இந்த மாதம் கரு சற்று மென்மை தன்மையை அடைந்திருக்கும். செவ்வாய் அதிபதி. ஸ்ரீமுருகனையும், க்ஷேத்ர பாலகர்களையும்  வணங்கவேண்டும்.
 
3-வது மாதம்: குழந்தையின் கை, கால்கள் உருவாகியிருக்கும். குரு அதிபதி. இந்திரன், பிரம்மா மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை  வணங்கவேண்டும்.
 
4-வது மாதம்: குழந்தையின் எலும்பு மற்றும் நரம்பு உருவாகும் மாதம். சூரியன் அதிபதி. சிவனாரை வணங்கினால், கரு நல்ல வளர்ச்சி பெறும்.
 
5-வது மாதம்: குழந்தையின் தோல் மூலம் உடலமைப்பு உருவாகிக் கொண்டிருக்கும். சந்திரன் அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் ஸ்ரீதுர்கை அம்மனை  வணங்கவேண்டும்.
6-வது மாதம்: குழந்தையின் அங்கம், ரோமம், நகம் உருவாகும். சனி அதிபதி. ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீபைரவர் மற்றும் ஸ்ரீவிநாயகரை வழிபடவும்.
 
7-வது மாதம்: பிராணன் உருவாகும். புதன் அதிபதி. ஸ்ரீவிஷ்ணுவை வணங்கவேண்டும்.
 
8-வது மாதம்: கருவின் உடல் வளர்ச்சி பெருகும். ஸ்ரீவிநாயகரை வணங்கவேண்டும்.
 
9-வது மாதம்: கரு முழு வளர்ச்சி பெற்றிருக்கும். சந்திரனே அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் துர்கையை வழிபட வேண்டும்.
 
10-வது மாதம்: குழந்தை பிறந்துவிடுவதால் ஆத்ம பலம் பெறும். இதற்கு ஆத்மகாரகனான சூரியன் அதிபதி. சிவனாரை வழிபட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments