Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த எண்ணெய்யில் விளக்கேற்றினால் என்ன பலன்கள் தெரிந்து கொள்வோம்...!

Webdunia
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகல வித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.
 
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
 
நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
 
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
 
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.
 
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் (நல்லெண்ணை)  தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது.
 
நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய்,  நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
 
மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments