இந்த வலம்புரி சங்கை அவரவர்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சுத்தமாக வைத்து பூஜித்தால் நீங்காத செல்வம் பெருகும்.
ஆடி மாதம் பூர நட்ச்சத்திரம், புரட்டாசி பவுர்ணமி, ஆணி மாதம் வளர் பிறையுடன் கூடிய அஷ்டமி, அல்லது சித்திரா பவுர்ணமி அன்றும் வலம்புரி சங்கில் பால் வைத்து, மகாலட்சுமிக்கு வேண்டிய நெய்வேத்தியங்களை படைத்து பூஜை செய்தால் தன பாக்கியமும், பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேர்வதுடன், இதை செய்கிற தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் இல்லாமல் வாழ்வார்கள்.
ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் வைத்து துளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்திக்கும். புத்திரகானான குருவுக்கு பஞ்சமி திதியன்று வலம்புரி சங்கில் பசும் பால் வைத்து பூஜித்தால் பிள்ளை இல்லாத தம்பதியர்க்கு பிள்ளை பிறக்கும். வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில், இடம்பிரி சங்கும் வைக்கவேண்டும்.
பிறந்த பிள்ளைக்கு வலம்புரி சங்கில் பால் வைத்து, அந்த பாலை புகட்டினால் குழந்தை ஆரோக்கியத்தோடு இருக்கும். அதோடு கண்திருஷ்டி அணுகாது. செய்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த சங்கில் பசும் பால் வைத்து 27 செவ்வாய் கிழமைகள் அம்மனை பூஜித்தால் எல்லா தோஷங்களும் விலகி திருமணம் நடைபெறும்.
பில்லி, செய்வினை கோளாறுகள் ஆகியவை சங்கு இருக்கும் வீட்டை அணுகாது.