Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபத்தின் திரி வகைகளும் அதன் அற்புத பலன்களும் !!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:59 IST)
தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து அதன் மூலம் திரியினைத் தயார் செய்து தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி நிலையான செல்வம் வரும்.


பொதுவாக பருத்திப்பஞ்சுதிரிகொண்டேதீபங்கள் ஏற்றப் படுகின்றது. இத்திரியினைப் பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

வாழைத் தண்டினை காயவைத்து அடித்து பஞ்சு போலாக்கி திரி தயார் செய்து தீபம் ஏற்ற வேண்டும். முன்னோர் சாபம், தெய்வக் குற்றங்கள் நீங்கி நலமான வாழ்வு கிடைக்கும். மேலும் இது குடும்ப அமைதி, மனசாந்தி, குழந்தைப்பேறு ஆகியவற்றை தரும்.

வெள்ளெருக்கம் பட்டையை ஊற வைத்து காய வைத்து அடித்து நாராக்கி திரியாகத்திரித்து தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வம் வளரும்.

புதிய வெள்ளை நிறதுணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட அனைத்து நல்ல பலன்களும் கிடைக்கும்.

தீபம் ஏற்றியவுடன் தீபத்தில் முப்பெரும் தேவியர் வந்துவிடுவர். ஆகையால் தீபத்தின் திரியினை தூண்டிவிட்டு பிரகாசமாக்கலாம். திரியின் கசடினை தட்டி விடக்கூடாது.

தீபத்தினை தானாக அணைய விடக்கூடாது. தீபத்தினை அணைய வைக்கும் போது வாயால் ஊதவோ, கைகளால் விசிறவோ கூடாது.

பூக்களால் அல்லது கல் கண்டினால் தீபத்தின் சுடரினை அணைய வைக்கலாம். சிறு குச்சியைக் கொண்டு திரியை விளக்கினுள் நுழைத்து எண் ணெயில் அமிழ்த்தி அணைய வைக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments