Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திகை தீபம் ஏற்றும் போது சொல்லவேண்டிய மந்திரம் !!

Webdunia
சிவபெருமானுக்கும், கார்த்திகேயனான முருகப் பெருமானுக்கும் உகந்த கார்த்திகைத் திருநாளை விரதம் இருந்து வரிசையாகத் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடுவார்கள்.

சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் விசேஷமானது என்று தினமும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வணங்குகிறார்கள்.  அது முடியா விட்டாலும் துவாதசி, சதுர்த்தசி, பெளர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது அகல் விளக்கேற்றி வணங்குவது சிறப்பு.
 
கார்த்திகைதீபத் திருநாளில் நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள். கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தைக் கூற வேண்டும்.
 
மந்திரம்:
 
கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலயே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.
 
புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்திப் பிறவி வரையில் உள்ளவர்கள்-இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த தீப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும் ஆனந்தம் பெறட்டும் என்று இந்த மந்திரத்தின் பொருள். 
 
தனக்கு மட்டுமல்லாமல் காண்கின்ற அனைவருக்கும் துன்பம் விலகட்டும் என்று வேண்டுவது எவ்வளவு உயர்ந்த நோக்கம் பாருங்கள்! மந்திரம் சொல்ல வரா விட்டாலும் தீபங்கள் ஏற்றும் போது அந்த பாவனை மனதில் இருப்பது சிறப்பு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments