Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வம் நிலைக்க செய்யக்கூடாத சில செயல்கள்...!

Webdunia
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க அல்லது வாங்க வேண்டும்.
செல்வம் நிலைக்க, விருத்தி அடைய பணம் கொடுக்கல் வாங்க செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம்.  கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய்  ஹோரையில் நடப்பது நல்லது. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 
 
இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கல் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது. வெற்றிலை, வாழையிலை இவைகளை  வாடவிடக் கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக் கூடாது.
 
எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக் கூடாது. ஊதியம் அணைக்க கூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும். அதிகமாகக் கிழிந்த  துணிகளை உடுத்தக்கூடாது. திணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. 
 
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும்போது, தரையில் சிந்தக்கூடாது. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக் கூடாது. எழவு  என்றும் கூறக்கூடாது.
 
ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே  போல ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில் அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே  வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும் காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாரதமும், மாலை வேலைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும்  ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
 
காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கை, பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும். தினசரி  விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments