Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ சனீஸ்வரரைப்போல் சர்வ வல்லமை பெற்றவரா மாந்தி?

Webdunia
தன் தவ வலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினான்.
தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில் சனியை வரவழைத்த ராவணன், என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில் சனிக்கு 11 ஆம் வீடு சிறந்த இடம், 12ஆம் வீடுதான் மிகவும் மோசமான இடம் ஆகும்.
 
வேறு வழி இல்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும் அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால  12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம்.
 
கோபமுற்ற ராவணன் தன் நீண்ட வாலால் சனியின் அந்தக் காலை வெட்டி வீழ்த்த அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்த சதைப் பகுதி  சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கனத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை அற்ப  ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம் மாந்தி. லக்னத்தில் நிற்கும் மாந்தியால் ஜாதகருக்கு ஆயுள் குறைவு. ஸ்ரீ சனீஸ்வரரைப்போல் சர்வ வல்லமை  பெற்றவர்தான் மாந்தி, சனிக்கு நிகரானவர் எனலாம். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும். மாந்தி ஆவியுலகத் தலைவர் ஆவார்.  சனீஸ்வரர் ஸ்ரீ ஐயப்பனுள் இணைந்தவர். மாந்தி ஆஞ்சனேயருள் இணைந்தவர்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments