Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் மாத ராசிபலன்கள் 2023! – சிம்மம்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (12:06 IST)
கிரகநிலை:



ராசியில் சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ)  என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
17-09-2023 அன்று சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-09-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-09-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
தனது தோரணையால் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் திறன் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான். இந்த மாதம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை ஏற்படுத்தும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பணஉதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.

பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும்.

கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். ராசிநாதன் சூரியன் சஞ்சாரம்  பணவரத்தை அதிகப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.

மகம்:
இந்த மாதம் உங்களின் குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. நல்ல முன்னேற்றம் காணலாம். வீண் அலைச்சல் மற்றும் வீண் விரையம் இனி ஏற்படாது.

பூரம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். எதிலும் திட்டமிடல் அவசியம். பலன்கள் சற்று தாமதமாகி கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண்பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை.

உத்திரம்:
இந்த மாதம் கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு, மேல் அதிகாரிகளின் அனுசரனையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும்.

பரிகாரம்:  பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments