கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!

Webdunia
தினசரி வீட்டில் கணபதி ஹோமம் செய்ய வேண்டும் என்பதில்லை. இத்தனை நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டில் கணபதி ஹோமம் செய்ய வேண்டும் என்ற கணக்கும் ஏதும் கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப செய்து கொள்ளலாம்.
கணபதியை வழிப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட அனைத்து விதமான செயல்கள் முறையே திருமணம், புது வீடு புகழ், தொழில் முதலியவற்றில்  தடையற வெற்றிகிட்டும்.
 
எந்த தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம்  நடத்தும்போது கணபது ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி  ஹோமம் நடத்தி உடல்நிலை நன்மையை  பெறலாம்.
 
மஹாகணபதி ஹோமம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக அமைகிறது. விக்ன விநாயகர் எல்லா  தடையையும் நீக்கி வெற்றியை தேடி தருபவர். இன்னல்களை களைபவர்.
 
எல்லா புது முயற்சிகளுக்கும், கல்விகேள்விகளில் சிறந்து விளங்கவும், திருமண முயற்சிகள் வெற்றியடையவும் விநாயக பெருமானை  துதிப்பது நலம்.  யார்யாருக்கு கேது தசை நடக்கிறதோ, அவர்களும் மஹாகணபதி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமத்தை வருடம்  ஒரு முறை செய்தால் வாழ்வில் வளமும், நலமும் பெருகும். ஒவ்வொரு மாதமும் தங்கள் பிறந்த நக்ஷத்திரத்தில் கணபதி ஹோமம்  செய்வதால் வாழ்வில் தடைகள் அனைத்தும் நீங்கும்.
 
வாரத்திற்கு ஒரு முறை, மாதம் இரு முறை, சங்கடஹர சதுர்த்தி நாள், மூன்று மாதத்திற்கு ஒரு  முறை, வருடம் இரு முறை,  வருடந்தோறும் பிறந்தநாள், திருமண நாள் என்று முக்கியமான விசேஷ நாட்களில் செய்தல் என்று அவரவர் தங்கள் சௌகரியப்படி எப்போது  வேண்டுமானாலும் கணபதி ஹோமம் செய்யலாம்.
 
குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒருமுறையாவது வீட்டில் கணபதி ஹோமம் செய்வது நல்லது.  இதற்கு என தனியாக கால இடைவெளி ஏதும்  கிடையாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்