Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் மாவிலை தோரணம்...!

Webdunia
ஜாதகத்தில் எவ்வாறு பரிகாரம் உள்ளதோ, அதே போல் வாஸ்து முறைகளிலும் பரிகாரம் உண்டு. பண்டிகை நாட்களில் மட்டுமல்லாமல் அடிக்கடி தலைவாசலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீரும். லட்சுமி கடாஷம். எதிர்மறை அதிர்வுகளை  நீக்கும். நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்.
மாவிலை காற்றை சுதம் செய்து தூய்மைபடுத்தி புதிய உற்சாகத்தை கொடுக்கும் அதே வேளையில் மஞ்சள் பொடி கொண்டு போட்டு வைப்பது  வீட்டினுள் சிறிய சிறிய பூச்சிகளும் விஷ ஜந்துகளும் வரா வண்ணம் தடுக்கின்றது.
 
மேலும் கலசங்களில் மாவிலை வைக்க படுகின்றது. சில சமயம் கலசத்தில் வைக்கப்படும் நீரில் வெட்டிவேர், ஏலக்காய், கிராம்பு, சந்தன எண்ணெய், மஞ்சள் பொடி போன்றவை சேர்க்கப்படும். மாவிலைக்கு நீரில் உள்ள கிருமிகளை நாசம் செய்யும் சக்தி உண்டு. அது கலச நீரை  தூய்மை படுத்தி அதிக அளவு ஆக்சிஜன் வெளியிட்டு கொண்டிருக்கும்.
 
பல விதமான மக்கள் கூடும் விசேஷங்களில் நெகடிவ் சக்திகளை களைந்து நல்ல ஆரோகியமான சூழல் ஏற்படுத்தும் சக்தி மாவிலைக்கு  உள்ளது.


 
மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.
 
தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும். மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி  குறையாது.
 
மாமரத்தின் பதினொறு இலையை வளர்பிறையில் சனிக்கிழமை அன்று கட்டவேண்டும். இந்த சனிக்கிழமையில் கட்டினால் அடுத்த  சனிக்கிழமை கழட்டிவிட வேண்டும். பிளஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடக்கூடாது.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments