Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுக்கிர வார பிரதோஷமும் வழிபாட்டு பலன்களும் !!

Webdunia
சிவனாருக்கு உகந்த பூஜைகளில், பிரதோஷ பூஜை மிக மிக முக்கியமானது. இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும்.

சுக்கிர வார பிரதோஷம் சிறப்பு வாய்ந்த்து. சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில், பிரதோஷம் வருவதும் சுபிட்சம் தருவது. ஐஸ்வர்யம் பெருகும் என்பது உறுதி.
 
பிரதோஷ பூஜையின் மகத்துவம் யாதெனில், இதில் திரள்வது புண்ய சக்திகள் மட்டுமல்ல, இறைவனே பிரதோஷ நேரத்தில் திருநடனக் காட்சி அளிப்பதால், நடராஜத் தத்துவமாகிய - அனைத்தும் எப்போதும் இறையருளால் இயங்குவதே! - என்ற பேருண்மையை நன்கு உணர்த்துவதாகும். 
 
பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே மாலையில், பிரதோஷ நேரத்தில், சிவபெருமானுக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். காணக் கிடைக்காத அற்புதக் காட்சியைக் கண்ணாரத் தரிசிப்பதும் மனதார அப்போது பிரார்த்திப்பதும் மிகுந்த பலனைத் தரும்.
 
அபிஷேகத்துக்கானப் பொருட்களை வழங்குவது இன்னும் புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே பிரதோஷ நாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள். சிவனாருக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் சார்த்துங்கள். பிரதோஷ பூஜையைக் கண்ணார தரிசித்தால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments