Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - கன்னி

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:18 IST)
ஆகாயக் கோட்டை கட்டுபவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தொட்டது துலங்கும்.

எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். வீட்டை வாஸ்துப்படி சரி செய்து கட்டுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். ராசிநாதன் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் அழகு, இளமைக் கூடும்.
 
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலம் தீர்வு காண்பீர்கள். உங்களின் இங்கிதமானப் பேச்சு எல்லோரையும் கவரும். உறவினர் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 24-ஆம் தேதி வரை செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வழக்கு சாதகமாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
 
சூரியன் சாதகமாக இல்லாததால் முன்கோபம், கண் எரிச்சல், அடி வயிற்றில் வலி வந்துப் போகும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். திடீர் பயணங்களாலும், செலவுகளாலும் திணறுவீர்கள். ஜென்ம ராசியிலேயே குரு தொடர்வதால் ஆரோக்ய குறைவு வந்துப் போகும். உடம்பில் கட்டி வந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. பழங்கள், காய்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்ற குழப்பங்களும் வரும்.
 
கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த மனயிறுக்கம் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்ன சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உழைப்பிற்கேற்ற உயர்வை பெறும் மாதமிது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments