Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - தனுசு

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:32 IST)
நீதிக்காக வளைந்துக் கொடுப்பவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க வலுவாக அமர்ந்திருப்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். தந்தையார் உதவுவார். பாகப்பிரிவினை சுமூகமாக முடிவடையும்.
 
வழக்கில் வெற்றி பெறுகூர்கள். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
 
சிலர் நகரத்தை நோக்கி இடம் பெயர்வீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நட்பால் ஆதாயமடைவீர்கள். கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியமாக சவால்களை ஏற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் அடிமனதில் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பால் உங்கள் மரியாதைக் கூடும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள்.
 
24-ஆம் தேதி வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் மனஇறுக்கம், வீண் அலைச்சல், முன்கோபம், ஹார்மோன் பிரச்னைகள், சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்துச் செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக சிலர் நீதிமன்றம் செல்ல நேரிடலாம். மகளின் கல்யாண விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் சாலை வழிப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள் வரும்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். ஹிந்தி, கன்னட மொழியினரால் லாபம் கூடும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். தொல்லை தந்த மூத்த அதிகாரி மாற்றப்படுவார். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். தடைகற்களை உடைத்தெறியும் மாதமிது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments