கல் மனசுக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைப்பவர்களே! இந்த மாதம் முழுக்க செவ்வாயும், சுக்ரனும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றிப் பெறுவீர்கள். நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும்.
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சகோதரிக்கு திருமணம் முடியும். சகோதரருக்கு வேலை அமையும். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். 9-ந் தேதி வரை குரு 5-ம் இடத்தில் நிற்பதால் பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மகளின் கோபம் குறையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக் கிடைக்கும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
10-ந் தேதி முதல் குரு வக்ரமாகி 4-ல் அமர்வதால் தாயாரின் ஆரோக்யம் பாதிக்கும். அவருடன் விவாதங்கள் வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். ராசிநாதன் புதனும் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தி தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வாகன வசதிப் பெருகும். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். ராகுவும், சனியும் சாதகமாக இருப்பதால் அயல்நாட்டிலிருக்கும் நண்பர்கள், வேற்றுமதம், மொழியினர் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு, மனை வாங்குவீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களுடைய புது முயற்சிகள் யாவும் பலிதமாகும். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களால் பயனடைவீர்கள். வியாபாரம் செழிக்கும். பற்று வரவு கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். கடையை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும்.
அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பார்கள். சக ஊழியர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். பழைய பிரச்னைகளின் பலம் குறைவதுடன் புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.