ஆனிமாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் என்றாலே, பாடல் பெற்ற கொங்கு ஏழு ஸ்தலங்களில் முதல் தலமாக உள்ள அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் சுயம்புமூர்த்தியாக இறைவன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். திருமணதடை, குழந்தையின்மை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேறுவதால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து தரிசனம் செய்கின்றனர். அதே போல் மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமியன்ற ஆலயத்தில் உள்ள காலைபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வணங்கி செல்வார்கள். இன்று நடைபெற்ற பூஜையில் பால், தயிர், மஞ்சாள்,திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசன திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை காண் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரின் தரிசனம் பெற்றனர். மேலும், ஆனி மாதம் என்றாலே சிவனுக்கும், கடவுளுக்கும் உகந்த நிலையில் ஆனி மாத அஷ்டமி தேய்பிறை நாளில் கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.