Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!

ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!

K.P. Vidhyadharan

, சனி, 12 ஏப்ரல் 2014 (15:36 IST)
விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. 

ஜய வருட ரா‌சி பல‌ன்களை ஜோ‌திட‌‌ ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். 

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். இந்த ஜய வருடம் உங்களுக்கு 6வது ராசியில் பிறப்பதால் அடிக்கடி வேலை விஷயமாகவோ, வெளியூர்களுக்கோ சென்று வரவேண்டியிருக்கும். 




webdunia
மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், மற்றவர்களின் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குரு பகவான் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். 




webdunia
காசு பணத்திற்காக விலை போகாத நீங்கள், கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்கள். உங்களின் யோகாதிபதியான சுக்கிரன் 9ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் பன்மடங்கு பெருகும். 




webdunia
புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். உங்களின் பாதகாதிபதியான சுக்கிரன் 8ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை கடினமானதாக இருந்த காரியங்களையெல்லாம் எளிமையாக முடித்துக் காட்டுவீர்கள். 



webdunia
எதையும் மேலோட்டமாக பார்க்காமல் ஆழமாக அலசி ஆராய்வதில் வல்லவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

webdunia
ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் நீங்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். 




webdunia
எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று நினைக்கும் பொதுவுடைமைவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவாக 5ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். 




webdunia
அதிரடியாக செயல்பட்டு உடனடியாக தீர்வு காண்பதில் வல்லவர்களே! உங்களின் ராசிநாதனான செவ்வாய் லாப வீட்டில் இருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். 




webdunia
பொதுவாக அமைதியை விரும்பும் நீங்கள், தர்க்கம் என வந்து விட்டால் இடியாக முழங்குவீர்கள். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் பிறப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். 




webdunia
மனசாட்சி ஒதுக்கும் செயல்களை மந்திரியே சொன்னாலும் செய்ய மறுப்பவர்களே! உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும்.




webdunia
உள்ளம் அழுதாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நகைச்சுவையாக பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். 



webdunia
யார் மனதும் புண்படாதபடி பேசும் நீங்கள், ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அழகும் இளமையும் கூடும். 

Share this Story:

Follow Webdunia tamil