சூரனை வேல்கொண்டு வதம்செய்த முருகனின் வெற்றியை போற்றும் விதமாக திருச்செந்தூரில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமை யில் விர தம் தொடங்கி ஆறு நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி விரதம் இருந்து முருகனை வணங்குகின்றனர்.
ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்து விரதம் முடிக்கும் பக்தர்கள் வெற்றிக்கு அடை யாளமாக திருக்கல்யாணம் முடிந்து தங்கள் ஊர் திரும்புகின்றனர். காலம் காலமாக கொண்டாடப்படும் சூரசம்ஹாரத்தின் புராண கதையினை நாம் பார்க்கலாம்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்த தோன்றிய அக்னியில் உருவானவர் ஆறுமுகப் பெருமான். சரவணப்பொய்கையில் இருந்த தாமரை மலர்களில் குழந்தைகளாக உருமாறி கார்த்திகைப் பெண்களிடம் கந்தனாக வளர்ந்தார். அவரது அழகு அனைவரையும் கவர முருகன் ஆனார். முருகன் அவதாரமே சூரனை சம்ஹாரம் செய்வதற்காகத்தான் என்பதை உணர்த்துகிறது புராணம்.