Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலம்புரி சங்கினை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதா...?

Webdunia
வலம்புரி சங்கை காதில் வைக்க, ஓம் என்ற பிரணவ சப்தம் வருவது தான் இதன் சிறப்பம்சமாகும். வலம்புரி சங்கினை ஐஷ்வர்யம் பெருக வீட்டிலோ அல்லது தொழில் விருத்தி அடையும் பொருட்டு, அங்கேயோ வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கு மிகவும் பவித்திரமானது என்பதால்,அதனை சுத்தமாகவும்,  தினமும் பூஜை செய்தும் வழிபட வேண்டியது அவசியம். 
கணவன்-மனைவி நல்ல ஆயுளுடன்,மனமொத்த தம்பதியராக வாழ, சித்ரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி  மாத பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்தல் வேண்டும்.  
 
தேக ஆரோக்கியத்தை மேம்படுத்த, தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் நோய் நொடியில்லாத ஆரோக்கியத்தைப் பெறலாம். வீட்டில் வலம்புரி சங்கினை வைத்து பூஜை செய்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது  என்பது நம்பிக்கை. 
 
குழந்தை பாக்கியம் வேண்டி நிற்கும் தம்பதிகள், பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த  பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி  வர சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெறலாம். 
 
ஜாதகத்தில் செவ்வாய் தோஷ பாதிப்பு உள்ளவர்கள், தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.
 
மனம் மற்றும் உடல் தூய்மையோடு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து பூஜை செய்து வர பதினாறு செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments