Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவராத்திரி வழிபாட்டில் லட்சுமி தேவிக்கு படைக்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா...?

Webdunia
மஹாளயபட்ச அமாவாசை நாள் முடிந்து வரும் அடுத்த நாளில் நவராத்திரி விரதம் தொடங்குகிறது. நவராத்திரிக்கு உரிய பொதுவான சிறப்பு அம்பிகை வழிபாடு என்றாலும் வேறு சில சிறப்புகளும் இந்த நவராத்திரி நாளுக்கு உண்டு.
நவராத்திரிக்கு படைக்கப்படும் உணவுகளை தேவர்களே வந்து சாப்பிடுவதாக ஐதீகமாம். இந்த பத்து நாளில் விஜய தசமி அன்றுதான் இராமன் இராவணனுடன் போர் புரிய புறப்பட்ட நாளாம். வில்வித்தை வீரன் அர்ஜூனன் ஒரு வருடம் கட்டி வைத்திருந்த ஆயுதங்களை விஜயதசமி  அன்று எடுத்து உயிர்ப்பித்துக்கொண்டானாம்.
 
நவராத்திரி என்பது மகிஷாசுரமர்த்தி அவதாரத்திற்காக கொண்டாடப்படும் விழாவாகும். ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில் அனைத்து  நாட்களிலும் ஒரே மாதிரியான பூஜை செய்முறைகள் செய்வது கிடையாது.
 
லட்சுமிக்கு படைக்கப்படும் உணவுகள்: நவராத்திரியின் 4-வது நாள் தயிர் சாதமும்  உளுந்துவடையும் வைத்து படைப்பர், லட்சுமிக்கு உகந்த உணவு என்பதால், மற்ற உணவுகளைவிட இது கட்டாயம் இடம் பெறுதல் வேண்டும். கூடுதலாக அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல் போன்ற இனிப்பு வகைகளை வைத்து படைக்கவும் செய்யலாம். கற்கண்டு அல்லது கருப்பட்டி பொங்கலும்கூட செய்யலாம்.
 
5-வது நாள் தயிர் சாதம், பால்சாதம், சுண்டலை வைத்து படையல் இடுதல் வேண்டும். தயிர் சாதத்தினைவிட பால் சாதம் உகந்தவையாக  இருக்கும். உளுந்துவடைக்கு பதிலாக கடலை பருப்பு வடையும் சிலர் செய்வர்.
 
6-வது நாள் தேங்காய்சாதம், தேங்காய் பால் பாயாசம் மற்றும் தேங்காய் எண்ணெயில் சுண்டலைத் தாளித்தல் என தேங்காய் சம்பந்தமான  பொருட்கள் இடம்பெறும். லட்சுமிக்கு பழ வகைகள் கொண்டு படையல் இட்டால் கூடுதல் பலனைப் பெற முடியும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments