Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரை மாதத்திற்கு என்னென்ன சிறப்புக்கள் உண்டு தெரியுமா...?

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (10:04 IST)
தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார்.


இந்த சுழற்சியே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். எனவே சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதையே தமிழ் வருடப்பிறப்பு என மக்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த மாதத்தில் வரக்கூடிய ‘சித்ரா பெளர்ணமி’மிக விசேஷமானது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளிவரும், அது பூமி நாதம் என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான தான தருமங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும்.

பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில் தான். சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட செல்வம் பெருகும். சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments