சிவன் கோவிலில் எப்படி கும்பிடவேண்டும் என்பதை பார்ப்போம். இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட சாமி கும்பிடும் முன்பாக தானம் செய்வதால் புண்ணியம் அதிகரிக்கும்.
சிவன் கோவிலில் , சிவன் சிலைக்கு வடக்கு திசையை நோக்கி நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கோவிலுக்கு எப்போதும் வெறும் கையுடன் கோயிலுக்கு செல்லக்கூடாது. பழம், பூ, எண்ணெய், காணிக்கை இதில் எதாவது ஒன்றை வலது கையில் கொண்டு செல்ல வேண்டும்.
சிவன் கோவிலில் வடக்கு திசையை நோக்கிதான் கீழே விழுந்து கும்பிடவேண்டும்.
பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும் மூடியிருக்கும் கோவிலில் வெளியிலிருந்து சாமி கும்பிட்டுக் கூடாது. வாகனங்களில் சென்றபடியே கடவுளை வணங்கக் கூடாது. அது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.
சிவன் கோவிலில் முதலில் அம்மாளை கும்பிட்ட பிற்குதான், சிவனை கும்பிடவேண்டும்.