தன்மானம் அதிகம் கொண்ட நீங்கள் யார் தயவிலும் வாழ மாட்டீர்கள். ராகுபகவான் லாப வீட்டில் நீடிப்பதால் பல பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.
கடன் உதவி எதிர்பார்த்த வகையில் வந்து சேரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. பழைய இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் சின்னதாக ஒரு இடம் வாங்க முயற்சி செய்வீர்கள். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு.
ராசிநாதன் சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். ஆனால் 5-ந் தேதி வரை சப்தமாதிபதி செவ்வாய் 4-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
ஆனால் 6-ந் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடத்தில் அமர்வதால் பிள்ளைகளிடம் உங்களின் கோபத்தை காட்டிக் கொண்டிருக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். பாதச் சனி தொடர்வதால் மற்றவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும்.
கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரையேறும் மாதமிது.