புரட்சியை விரும்பும் நீங்கள், நெருக்கடி நேரத்திலும் நேர்மையாக இருப்பீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தொடங்கியதை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கு சாதகமாகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாகப் பேசுவார்கள்.
வீடு கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சி பலிதமாகும். லோன் கிடைக்கும். என்றாலும் உங்கள் குரு 6-ல் மறைந்திருப்பதாலும், 8-ல் சனி தொடர்வதால் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். நீங்களும் அவர்களுக்கு சரிசமமாக போட்டிப் போட்டுக் கொண்டிருக்காதீர்கள். விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சில நாட்களில் தூக்கம் குறையும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோருடன் கலந்தாலோசித்து சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். ஆனாலும் மூளை பலத்தால் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். எதிர்பாராத நன்மைகள் சூழும் மாதமிது.