Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகப்பெருமானை தைப்பூச திருநாளில் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!

Webdunia
சூரபதுமர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு பார்வதேவி ஞானவேல் வழங்கினார். பார்வதியிடம் இருந்து முருகன் ஞானவேல் பெற்ற தினத்தையே,  தைப்பூசத் திருநாள் என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

பழத்திற்காக கோபித்துக் கொண்டு, ஆண்டி கோலத்தில் முருகப்பெருமான் நின்ற இடம் பழனி. அந்தத் திருத்தலத்திற்குச் சென்றுதான், பார்வதி ஞானவேலை வழங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே தான், தைப்பூசத் திருநாள், பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
 
தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி  வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது. 
 
முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்றதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர் வரை மனம் விரும்பி  கொண்டாடும் விழாவாகவும் தைப்பூசம் உள்ளது.
 
தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது. அதனால்  தான் ‘சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள். தைப்பூச திருநாளில் தான் உலகம்  தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
 
அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். 
 
தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும். தேவர்களின் குருவான  பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments