Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாள் வழிபாட்டு பலன்கள் !!

Webdunia
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்களை அடைய முடியும். ஒவ்வொரு மாதத்திற்குரிய பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

1. சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.
 
2. வைகாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.
 
3. ஆனி மாத பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் உண்டாகும். 
 
4. ஆடி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் பெறலாம். 
 
5. ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்தால் செல்வம் பெருகும். 
 
6. புரட்டாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
 
7. ஐப்பசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் தானியம் பெருகி, பசிப் பிணிகள் நீங்கும்.
 
8. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் புகழ் வளர்ந்து நிலைத்து நிற்கும்.
 
9. மார்கழி மாதப் பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.
 
10. தை மாத பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நன்மையும் கிடைக்கும்.
 
11. மாசி மாத பௌர்ணமி அன்று விளக்கேற்றினால் துன்பங்கள் விலகி இன்பம் கிடைக்கும்.
 
12. பங்குனி மாத பௌர்ணமி நாளன்று விளக்கேற்றினால் தர்மம் செய்த பலன் கிட்டும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments