Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : விருச்சிகம்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : விருச்சிகம்
, வெள்ளி, 29 ஜூலை 2016 (17:51 IST)
தவறுகளை தட்டிக் கேட்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் செயலில் வேகம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் ஆதரவால் முன்னேறுவீர்கள். பழைய நகையை தந்து விட்டு புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி தாமதமாக கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேற்றுமாநிலத்தில் சிலருக்கு வேலை அமையும். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள குறுகிய கால கோர்ஸில் சேருவீர்கள்.
 
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்துக் கொண்டு வேலைச்சுமையையும், உத்யோகத்தில் நிம்மதியின்மையையும், அவமானங்களையும், வீண் பழிகளையும் தந்துக் கொண்டிருக்கும் குருபகவான் 2-ஆம் தேதி முதல் லாப வீட்டில் அமர்வதால் தடைகளெல்லாம் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களெல்லாம் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். புது வேலைக் கிடைக்கும். ஷேர் லாபம் தரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
 
உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் வீண் டென்ஷன், பணப்பற்றாக்குறை, இரத்த சோகை, சிறுசிறு நெருப்புகள் வந்துப் போகும். ஜென்மச் சனி நடைபெறுவதால் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசாதீர்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! உங்களுடைய புதிய திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் விளம்பர யுக்தியை கையாளுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மூலமாக புதியவர்கள் அறிமுகமாவார்கள். பற்று வரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் குறையும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகளுடனான மோதல்கள் விலகும். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்பாற்றல் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : துலாம்