Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : துலாம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (17:48 IST)
பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கான வழி கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிட்டும். தவறாக வழி நடத்தியவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் உடனடியாக நிறைவேறும். வேலைக் கிடைக்கும்.
 
2-ம் வீட்டிலேயே செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மனைவி ஆதரவாக இருப்பார். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சகோதர வகையில் அனுகூலம் உண்டு. உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்ப வருமானத்தை உயர்த்த வழி தேடுவீர்கள். சிலர் வேலையில் இருந்துக் கொண்டே மீதி நேரத்தில் வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்பு கிட்டும். பழைய சொந்த-பந்தங்களால் இருந்து வந்த அன்புத் தொல்லைகள் விலகும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். ஊர் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
 
உங்கள் ராசிநாதன் சுக்ரனும் சாதகமாக இருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களைப் பற்றிய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். 2-ஆம் தேதி முதல் குரு 12-ம் இடத்தில் மறைவால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
 
கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். உயர்கல்வியிலும் முன்னேறுவீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். பங்குதாரர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். சக ஊழியர்களின் உதவியால் அதிகாரிகள் நினைத்தை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments