Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : கும்பம்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : கும்பம்
, வெள்ளி, 29 ஜூலை 2016 (18:13 IST)
விழுவதெல்லாம் எழுவதற்கே என்பதை அறிந்தவர்களே! சூரியன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் இங்கிதமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். தொட்ட தெல்லாம் துலங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் இருந்த தேக்க நிலை, மந்த நிலை மாறும். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். ஷேர் மூலமாக பணம் வரும்.
 
உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்களின் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். அழகு, இளமைக் கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். ஈகோப் பிரச்னைகள் தீரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக அறைக் கட்டுவது, வீட்டை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற சுபச் செலவுகளும் இருக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள்.
 
2-ஆம் தேதி முதல் குரு 8-ல் மறைவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். முன்கோபத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
 
செவ்வாய் 10-ம் இடத்திலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை பெருகும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். சகோதரங்களுக்கு கூடுதலாக செலவு செய்வீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கித் தவித்தீர்களே! உண்மையான நட்பு எது என்பதை உணர்வீர்கள். வேலைக் கிடைக்கும். உயர்கல்வியிலும் வெற்றி உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும்.
 
உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடத்துவதாக வருத்தப்படுவீர்கள். கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : மகரம்