Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்துப்படி ஈசான்ய மனைகள் எவ்வாறு இருக்க வேண்டும்....?

Webdunia
நமக்கு வீடு கட்ட முதலில் இடம் தேவை. இடமானது எட்டு வகையானத் தன்மைகளைக் கொண்டதாகவும், அதிலும் நேர்த்தன்மை, மூலைத்தன்மை ஆகிய சிறப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அதிலும் நிலம் வாஸ்து சாஸ்திர கட்டுப்பாட்டுக்கு இணங்கி வந்தால் மட்டுமே,  மனைகள் மனமகிழ்ச்சியைத் தரும்.
வாஸ்துப்படி ஈசான்ய மனைகள்:
 
மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் சாலை அமைப்புள்ள மூலை மனை, ‘ஈசான்ய மனை’ எனப்படும். இது அனைத்துச் சிறப்புகளும் கொண்ட மனை. இப்படிப்பட்ட மனைகள் குபேர சம்பத்து தரும் மனைகளாகும். 
 
மனையானது தெற்கே உயர்ந்து வடக்கே பள்ளமாக இருக்கவேண்டும். இதைப் போலவே மேற்கு உயர்ந்து, கிழக்கு பள்ளமாக இருக்க  வேண்டும். இந்த அடிப்படையில் நைருதியம் உயர்ந்து ஈசான்யம் பள்ளமாக இருப்பது தனிச்சிறப்பு கொண்ட மனையாக அமையும்.
 
மாறாக, கிழக்கு உயர்ந்து மேற்கு சரிவாக இருந்தால், குடும்பத் தலைவனை பலவீனப்படுத்துவதுடன் பொருளாதாரச் சீரழிவைத் தரும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். 
 
வடக்கு உயர்ந்து தெற்கு சரிவாக அமைந்துவிட்டால், கிடைக்கக்கூடிய இடத்தில் கேட்டால்கூட, கடன்  கிடைக்காது. பரிகாசப் பேச்சுகளுக்கு ஆளாக நேரிடும். குடும்பத் தலைவி மற்றும் மகள் வகையில் மருத்துவச் செலவுகள், பெண்களால் சண்டைச் சச்சரவுகள் ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments