Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2017 வருட ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்; எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு செல்கிறார்கள்!!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (17:23 IST)
நிகழும் ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 11ம் தேதி (27.7.2017) வியாழக்கிழமை அன்று மதியம் 12:48 மணிக்கு பெயர்ச்சி  ஆகிறார்.



நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரன் சுற்றுப் பாதையில் இவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு  தங்கியிருப்பார். நேர் எதிர் ராசியில் நிற்கும் கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர்.
 
இந்த வருட ராகு-கேது பெயர்ச்சி சிம்ம ராசியில் இருக்கும் ராகு கடகத்திற்கும், கும்ப ராசியில் இருக்கும் கேது மகரத்திற்கும்  பெயர்ச்சியாகின்றனர்.
 
நற்பலன் பெறும் ராசிகள்:
 
ராகு - ரிஷபம், கன்னி, கும்பம்.
கேது - சிம்மம், விருச்சகம், மீனம்.
 
சுமாரான பலன் பெறும் ராசிகள்:
 
ராகு - துலாம், விருச்சிகம், மகரம், மீனம்.
கேது - மேஷம், ரிஷபம், கடகம், கன்னி.
 
பரிகார ராசிகள்:
 
ராகு - மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு.
கேது - மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம்.
 
சொல்ல வேண்டிய ஸ்லோகம்: (ராகு)
 
அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திராத்ய விமர்தநம்
சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்.
 
சொல்ல வேண்டிய ஸ்லோகம்: (கேது)
 
பலாஸ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரக மஸ்தகம்
ரெளத்ரம் ரெளத்ராத் மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments