Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிதுனம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

மிதுனம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
, வெள்ளி, 2 ஜனவரி 2015 (13:00 IST)
சமூக அவலங்களை தட்டிக் கேட்க தயங்காதவர்களே! உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் குரு நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குடும்ப வருமானம் உயரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதைக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.

பிள்ளைகள் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வார்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். முன்கோபம் குறையும். சாதுர்யமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லா வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரும் மதிப்பார்கள். முகம் மலரும். அழகு, இளமைக் கூடும். அரசால் ஆதாயம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.
 
சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வழக்குகள் சாதகமாகும். இழுபறியாக இருந்த தள்ளிப் போன காரியங்கள் உடனடியாக முடிவடையும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இரு சக்கர வாகனத்தை தந்து விட்டு நான்கு சக்கர வாகனம் அமைப்பு உண்டாகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் கூடி வரும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உத்யோகத்தை விட்டு விட்டு சொந்த தொழில் தொடங்குவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
 
உங்களுடைய ராசியை சூரியன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். கனவுத் தொல்லையும் வந்துப் போகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். மற்றவர்களை திருத்துவதற்கு முயற்சி செய்து உங்கள் பெயரை நீங்கள் கெடுத்துக் கொள்ள வேண்டாம். ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல், டென்ஷன் இருக்கும்.

ங்கையின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்ரனும் ராசிக்கு 8-ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் நவீனமாக வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலைக் கிட்டும்.
 
4-ம் வீட்டில் ராகு நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தாயாருடன் கருத்து மோதல் வரும். அவரின் உடல் நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகி சரியாகும். கூடாப்பழக்க வழக்கங்களை தவிர்க்கப்பாருங்கள். லாகிரி, வஸ்துக்களையும் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்பில் மதிக்கப்படுவீர்கள். திடீர் பதவிகள், பெரிய பொறுப்புகள் தேடி வரும்.வியாபாரத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். சிலர் புது ஏஜென்சியும் எடுப்பீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தொழிலை மாற்றுவீர்கள். எலக்ட்ரானிக்ஸ், உணவு, போடிங், லாஜிங், துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பாக்கிகளும் வசூலாகும். புதிதாக பங்குதாரரை சேர்ப்பீர்கள். பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். நல்ல அனுபவமிக்க வேலையாட்கள் வந்தமைவார்கள். 
 
உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் கேது நிற்பதால் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். ஆனாலும் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு அதிகாரி உங்களுக்கு எதிராக இருந்தாலும் மற்றொரு அதிகாரி உங்களுக்கு சாதகமாக இருப்பார். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் அழைப்பு வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
 
மாணவ-மாணவிகளே! மாநில அளவில் நீங்கள் அதிக மதிப்பெண்களை பெற்று பரிசு, பாராட்டுகள் பெறுமளவிற்கு யோகம் உள்ளது. இருந்தாலும் அலட்சியம் இருந்துவிடாதீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திப் படித்தால் அரசின் உதவித் தொகையுடன் நீங்கள் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு யோகம் உண்டாகும். எதிர்பார்த்த கல்வி பிரிவு, கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். வேலையும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். திருமணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். சொந்தமாக வீடு, மனை வாங்குவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். இந்த 2015ம் ஆண்டு உங்களுக்கு லாப ஸ்தானத்தில் பிறப்பதால் எங்கும், எதிலும் வெற்றி வாகை சூடும் வருடமாக உங்களுக்கு அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil