Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி : ரா‌சி‌க்கார‌ர்க‌‌ள் எ‌ன்ன செ‌‌ய்ய வே‌ண்டு‌ம்?

Webdunia
வியாழன், 12 மே 2011 (19:18 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம ்: குருப் பெயர்ச்சி நடந்துள்ளது. மேஷ ராசிக்கு வந்திருக்கிறார். இந்தக் குருப் பெயர்ச்சியைப் பொறுத்து தங்களுடைய உள்ளம், உடல் நலம் ரீதியாக ஒவ்வொரு ராசிதாரரும் எந்தெந்தக் கடவுளை வணங்க வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன ்: குரு பகவான் பிறப்பிற்குரிய வீட்டில்தான் வந ்த ு உட்காருகிறார். அதாவது செவ்வாயுடைய வீடு. மேஷம் என்பது செவ்வாயினுடைய வீடு. இந்த மேஷத்தில்தான் வந்து உட்காருகிறார். இரத்த அணுக்கள், சிவப்பணுக்கள், ஹீமோகுளோபின் போன்றவற்றிற்குரிய கிரகம் செவ்வாய்தான்.

அப்படி மேஷத்திலேயே வந்து உட்காருவதால் கடுமையான உடல் நல பாதிப்புகள் இருக்கும். குறிப்பாக அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு அதிகமான பாதிப்புகள் இருக்கும். ஏனென்றால் இந்த அசுவினி நட்சத்திரத்தில்தான் அதிகமான நாட்கள், கிட்டத்தட்ட 25 நாட்கள் குரு பகவான் செல்கிறார். இவர்களுக்கெல்லாம் உடம்பு ஏதோ படுத்தி எடுப்பது போன்ற உணர்வுகள், உடம்பை அழுத்துவது போன்ற சிந்தனைகள், எரிச்சலாக இருப்பது, சின்னதாக தாழ்வு மனப்பான்மை போன்று வரும். இவர்கள் அரச மரத்தடியில் இருக்கக்கூடிய விநாயகரை வணங்கினால் நல்லது. அரச மரத்திற்கென்று சில மின் காந்த அலைகள் உண்டு. அந்த மின் காந்த அலைகளில் கொஞ்ச நேரம் நின்றால் நல்லது.

ரிஷப ராசிக்காரர்களுக்கு 12இல் தான் குரு வருகிறார். இதனால் வீண் செலவுகள் கொடுக்கும். பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்கு வரவழைக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால், கூடா நட்பு போன்றெல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷப ராசிக்கார்களுக்கு 12இல் குரு மறைவதால், இவர்கள் முருகனை வழிபடலாம். அதனால் தேக ஆரோக்கியம் கொடுக்கும். 12இல் குரு வந்தாலே நேரத்திற்கு சாப்பிட விடாது, தூங்க விடாது. ஏனென்றால் 12ஆம் இடம் சயனஸ்தானம். இந்த சயனஸ்தானத்தில் வருவதனால் இதுபோன்ற பாதிப்புகளைக் கொடுக்கும்.

மிதுன ராசிக்கார்களுக்கு மிகவும் அற்புதமான இடத்திற்கு வருகிறது. 11வது இடமான லாபஸ்தானத்திற்கு வருகிறது. இவர்களுக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. அதனால் இவர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. சாதாரணமாக ஏழைப் பிள்ளைகளுக்கு படிப்பிற்கு உதவி செய்தால் நல்லது. இதுபோன்று செய்தாலே குருவினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.

கடக ராசிக்கார்களுக்கு 10இல் குரு வருகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம் உயரவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், 10இல் குரு வந்தாலே சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாது. சொந்தக்காரர்களிடம், நண்பர்களிடம் ஒரு விஷயத்தை அடுத்த வாரத்தில் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லியிருந்தால், அந்த விஷயத்தைஅடுத்த வாரத்தில் இவர்களால் செய்ய முடியாமல் போய்விடும். கொடுக்கல், வாங்கல் பண விஷயத்திலும் அடுத்த மாதம் அடைத்துவிடுகிறேன் என்று சொல்வார்கள், அதுவும் முடியாமல் போகும். 10இல் குரு வருவதால், பொதுவாக கடக ராசிக்கார்கள் கேரண்ட்டர் கையெழுத்தெல்லாம் போடக்கூடாது. அப்படி போட்டால், போட்ட ஆள் ஓடிவிடுவார்கள் அல்லது இவர் கட்ட வேண்டிய நிலை வரும். இந்த விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இரத்த அழுத்தம் உயர்வது, யாராவது வழக்கு போட்டுவிடுவார்களோ, கைது செய்துவிடுவார்களோ என்பது போன்ற மன பீதியை இந்த 10ஆம் இடம் கொடுக்கும். பொதுவாக 10இல் குரு பதவியைக் கெடுக்கும் என்பார்கள். பதவியைக் கெடுக்கும் என்றால், புகழைக் கெடுப்பது போன்று நடக்கும். இதற்கு நேரடியாகவே தட்சணாமூர்த்தியை வழிபடலாம். இதனால் பெரிய ஆறுதல் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு 9ஆம் இடத்தில் குரு வருகிறார். அதுமட்டுமல்லாமல் குரு சிம்ம ராசியைப் பார்க்கிறார். அதனால் இனி எல்லாம் நன்றாக இருக்கும். உடல்நலப் பிரச்சனைகள் தீரும். திடமாக முடிவெடுப்பது போன்ற அமைப்புகளைக் கொடுக்கும். அதனால் இவர்களுக்கு எதுவும் தேவைப்படாது. இவர்கள் புத்தகங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். பழமையான பள்ளிக் கட்டடங்கள் புதுப்பிக்க சில உதவிகளெல்லாம் செய்யலாம். இதை செய்தாலே அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

கன்னி ராசிக்கார்களுக்கு 7வது வீட்டில் இருந்து 8வது வீட்டிற்கு குரு போகிறார். பொதுவாக கன்னி ராசிக்கு 8 என்பது கெடுதல் கிடையாது. மற்ற ராசிகளுக்கு 8 என்றால் கொஞ்சம் கெடுதல். உபய ராசிகளுக்கு இந்த 8 என்பது கெடுதல் கிடையாது. ஓரளவிற்கு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இருந்தாலும், தாமதமாகி தாமதமாகி சில விஷயங்கள் நடக்கும். குடும்ப விஷயங்கள், உறவினர்கள், நண்பர்கள் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். சுப விரயம் கொடுக்கும். அடுத்தடுத்து கல்யாணம், நிகழ்ச்சி - அண்ணணுக்கு, மகளுக்கு - என்று செலவினங்களாக அலையவிடும். இவர்கள் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வழிபடலாம். இதனால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இவர்களுக்கு கொஞ்சம் லேசாக தலை சுற்றல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments