Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன்கேடா - சமணர்களின் புன்னியத்தலம்!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (15:49 IST)
சம்சார சாஹரம் என்றழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து பேரின்பத்தை எய்துவதற்கு புனித யாத்திரையே ஒரே வழி என்று கூறுவர். நமது ரிஷிகள் இரண்டு விதமான புனித யாத்திரைகளைக் கூறுகின்றனர். ஒன்று ஜின் அகம். அதாவது, நமக்குள் உள்ளாழ்ந்து செல்வது அல்லது இறை உருவங்கள் மீது கவனத்தை வைத்து தியானிப்பது. இரண்டாவது புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வது.

webdunia photoWD
முனிவர்கள், சிரார்த்தர்கள் ஆகியோர் சம்பிரதாயங்களின் படி ஜென்கம் தீர்த்தகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாம் புனித யாத்திரை மேற்கொள்ளும் போது தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட புனித யாத்திரைகளுக்கு ஏராளமான வாய்ப்புள்ள நமது நாட்டில் உள்ள புனிதத் தலங்களில் ஜைனர்களின் புனிதத் தலமான மோகன்கேடா தீர்த்தமும் ஒன்று.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் தேச நெடுஞ்சாலையில் தார் என்ற நகரத்தில் இருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தப் புனிதத் தலம். இதனை 1940 ஆம் ஆண்டு வாக்கில் ஜைன மத குருவான பூஜ்ஜிய குருதேவ் ஸ்ரீராஜேந்திர சுரிசொர்ஜி மகராஜ் சாகாப் என்பவர் நிறுவினார். இப்புன்னியத் தலத்தில் 16 அடி உயரமுடைய பகவான் ஆதீஸ்வரர் பத்மாசனத்தில் அமர்ந்துள்ள சிலையும், ஸ்ரீராஜேந்திர சுரிசொர்ஜி, ஸ்ரீயத்தீந்ரா சுரிசொர்ஜி, ஸ்ரீ வித்யாசந்திர சுரிசொர்ஜி மகராஜ் சகாப் ஆகியோரின் புனித சமாதிகளும் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகைத் திங்களில் அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரையிலான 15 நாட்கள் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல, சித்திரை மாதத்திலும், பிறகு நாம் தை என்று அழைக்கும் மாதத்திலும் விழா நடைபெறுகிறது. அந்த விழா வரும் 15 ஆம் தேதி துவங்குகிறது.

webdunia photoWD
மால்வா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்தப் புனிதத் தலத்தில்தான் ஜைன மத முனிவர்களான தாதா குருதியோ பிரபுத் ஸ்ரீமத் விஜய் ராஜேந்திர சுரிசொர்ஜி வாழ்ந்து, தவமிருந்து பிரசங்கம் செய்த இடமாகும். இவர்தான் ராஜ்காருக்கு மேற்கே சத்ருன்சயின் அவதாரமான ரிஷாப் தியோஜியின் ஜைன ஆலயத்தை நிறுவினார். இந்த இடத்திற்கு அருகில்தான் கேடா என்ற உள்ளது. இங்கு வாழ்பவர்களை பஞ்சாராஸ் என்றழைக்கின்றனர்.

புனித குருதியோ சுரிசொர்ஜி இந்த இடத்தை கடந்துகொண்டிருந்த போதுதான் திடீரென்று அவருடைய கால்கள் நின்றன. தனது தியான சக்தியின் மூலம் எதிர்காலத்தை உணர்ந்த அந்த மகான், இந்த இடத்தில் ஒரு புனித ஆலயத்தை நிறுவ வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் என்பதைக் கண்டார்.

webdunia photoWD
அதுமட்டுமின்றி, ஓர் பேரமைதியைக் அளிக்கக்கூடிய ஒளிக்கூட்டத்தையும் கண்டார். அதன்பிறகு ராஜ்கார் திரும்பிய அவர், ஜின் லூனாஜி போர்வால் என்பவரை தான் எங்கு குங்குமத்தால் சுவஸ்திகாவை கண்டேனோ அந்த இடத்தை குறித்து வருமாறு செய்தார். அந்த இடத்தில் ஓர் கோயில் எழுப்ப வேண்டும் என்று கூற, ஜமீன்தார் லூனாஜி அதை செய்து முடித்தார்.

1940 ஆம் ஆண்டு விக்ரம் சோம்வார் ஆண்டில் மிராக் சீர்ஷர் சுக்லத்தின் 7வது நாளன்று ரிஷாப்தியோ உள்ளிட்ட கடவுள்களின் திருவுருவங்களுடன் அஞ்சன் சலாகாவை நிறுவினார். பூஜ்ய குருதியோ அவ்விடத்தில் பூஜை செய்து அக்கோயிலைத் திறந்து அதனை மிகப்பெரிய புனிதத் தலம் என்று அறிவித்தார். அதன்பிறகே இவ்விடம் மோகன்கேடா என்ற பெயர் பெற்றது.

ஜைனர்களின் புனிதத் தலங்களான 108 சித்தாச்சல் தீர்த்தங்களில் மோகன்கிரியும் ஒன்றாகும். இந்த இடத்தில்தான் தனது தலையில் வெள்ளை ரத்தினத்தைத் தாங்கிய நாகம் வாழ்ந்ததாகக் கூறுவர். இந்தக் கோயிலின் பின்புறம் உள்ள ராயன் மரத்தடியில் அந்த நாகம் வாழும் குன்று உள்ளதெனக் கூறுவர்.

webdunia photoWD
சித்தாச்சலிற்கு இணையான புனிதத் தலமாக கருதப்படும் இவ்விடத்தில்தான் 1963 ஆம் ஆண்டு பாஸ்சுதி மாதத்தின் 6 ஆம் நாள் நள்ளிரவு தியானத்தில் இருந்த நிலையில் ஸ்ரீராஜேந்திர சுரிசொர்ஜி உடலைத் துறந்தார். அவரின் மறைவிற்குப் பிறகு அங்கு சமாதி கட்டப்பட்டு அதன் மீது கோயிலும் எழுப்பப்பட்டது. அந்த நாள்தான் வரும் 15 ஆம் தேதி வருகிறது. ஜைனர்களின் இந்தத் புனிதத் தலம் 108 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எப்பொழுதும் இங்கு அமைதியும், மகிழ்ச்சியும் நிலவுகிறது.

மோகன்கேடா தீர்த்தத்திற்கு எவ்வாறு செல்வது :

ராஜ்காரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இவ்விடம் உள்ளது.

மேக்நகர் ரயில் நிலையத்தில் இருந்து 64 கி.மீ. தூரத்திலும், இந்தோரில் இருந்து 112 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

இவ்விடத்திற்கு அருகில் உள்ள பெரிய நகரம் தார். அது 47 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்து போக்குவரத்தும், தனியார் வாகன சேவையும் எப்போதும் உள்ளது.

மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | January 2025 Monthly Horoscope Simmam

இந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் நீங்கி நன்மை உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(29.12.2024)!

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | January 2025 Monthly Horoscope Kadagam

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மிதுனம்! | January 2025 Monthly Horoscope Midhunam

Show comments