Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாங்கலி கணேஷ் பஞ்சாயத்தன் கோயில்!

கிரண் தினகர் ஜோஷி

Webdunia
ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (18:12 IST)
சாங்கிலியில் இருக்கும் இந்த கணபதி கோயிலைப் பற்றி ஒரு பழமொழியே இருக்கிறது. அதாவது இந்த கோயிலில் இருக்கும் கணபதி தங்கத்தால் செய்யப்பட்டவர், இவர் எப்போதும் பட்டாடை உடுத்தியிருப்பார் என்று விளக்கம் தருகிறது அந்த பழமொழி.

WD
அதற்கேற்றவாறு, அந்த கணபதியும் பார்க்க பரவசமூட்டும் விதத்தில், இறைத் தன்மையுடன் காட்சி தருகிறார்.

சாங்கிலியில் இந்தக் கோயிலைப் பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூறும் அளவிற்கு புகழுடையது. இந்த கோயிலுக்கு வருபவர்களுக்கு மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

1844 ஆம் ஆண்டில் தான் இங்கு விநாயகரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு மிக அழகான சிவன், சூரியன், சிந்தாம்ஸ்நேஷ்வரி மற்றும் லஷ்மிநாராயண்ஜி ஆகியோரது சிலைகளும் அமைந்துள்ளன.

கடவுள் விநாயகரின் சிலைக்கு மிகவும் விலை உயர்த்த ஆபரணங்களும், வைர நகைகளும் அணிவித்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. விநாயகருடன் சித்தி, புத்தி சிலைகளும் பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

WD
கோயிலின் பிரதான நுழைவு வாயில் சிவப்பு கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களை வெகுவாக கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் பக்கவாட்டில் கிருஷ்ணா நதி ஓடிக் கொண்டிருக்கிறது. மழைக் காலங்களில் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், அதனால் அப்பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்படுவதும் வழக்கம்.

இதனால் கோயிலை மிகவும் பாதுகாப்பாகக் கட்டியுள்ளனர். அதாவது தரையில் இருந்து அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில், ஸ்ரீஜோதிபா மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டு கோ‌யி‌லி‌ன ் சுவ‌ர்க‌ள ் மிகவும் வலிமையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் யானை ஒன்றும் வளர்க்கப்பட்டு, பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சுந்தர் கஜராஜா என்ற யானை பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றது.

விநாயகரின் கோயிலில் சிறப்பு பூஜைகள், நவகிரக பூஜைகள், வேத பாராயணம் போன்றவை தினமும் நடந்து கொண்டிருக்கும்.

WD
விநாயகர் சதுர்த்தி இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் ஏராளமான மக்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர்.

இந்த கோயிலுக்கு வந்து விநாயகரை வணங்கினால் நமது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் இந்துக்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து விநாயகரை வழிபடுகின்றனர்.

எப்படிச் செல்வது?

பூனேயில் இருந்து 235 கி.மீ. தூரத்திலும், கோல்ஹாபுரில் இருந்து 45 கி.மீ. தூரத்திலும் சாங்கலி கிராமம் அமைந்துள்ளது.

ரயில் மார்கம் - சாங்கலி ரயில் நிலையத்திற்கு அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் இருந்தும் ரயில்கள் வருகின்றன.

சாலை மார்கம் - மும்பை, புனே, கோல்ஹாபுர் ஆகியவற்றில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விமான மார்கம் - கோல்ஹாபுர் விமான நிலையத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் சாங்கலி அமைந்துள்ளது.

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Show comments