Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் காளிகா திருக்கோயில்!

-அனிருத் ஜோஷி

Webdunia
இந்த வாரப் புனிதப் பயணத்தில் உஜ்ஜைனின் காளிக்காட்டில் உள்ள க ா‌ள ிகா மாதா திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம்.

இது கார் காளிகா என்று பலராலும் அறியப்படுகிறது. எல்லா மதத்தினரும் வந்து கா‌ளிகா மாதாவை வணங்கிச் செல்வதுதான் இந்த கோயிலின் சிறப்பம்சம்.

சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான காளிதாசர், காளிகா தேவியின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. கார் காளிகாவை வணங்கி, அவரது அருளாசி பெற்றதனால்தான் இவர் மிகப்பெரிய கவிஞராக புகழ்பெற்றார் என்றும் நம்பப்படுகிறது. காளிதாசர், மா காளிகாவைப் பற்றி எழுதிய பக்திப் பதிகம் ஷியாமளா தண்டக், ஒவ்வொரு ஆண்டும் உஜ்ஜைனில் நடைபெறும் காளிதாசர் உற்சவத்தில் பாடப்படுகிறது.

webdunia photoWD
இந்த கோயில் மகாபாரத காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கோயிலில் உள்ள திருவுருவச் சிலை சத்யுக காலத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றிய சரியான தகவல் எங்கும் இல்லை. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கும் இந்த கோயிலின் வரலாறு தெரிந்திருக்கவில்லை.

மன்னன் ஹர்ஷவர்தன் காலத்தில் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன் பிறகு நெடுங்காலத்திற்குப் பின்னர் குவாலியரின் மன்னரால் இந்த கோயில் திருப்பணிகள் நடந்துள்ளன.

webdunia photoWD
இந்த கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. அதில் நவராத்திரி விழா தான் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

எப்படிச் செல்வது?

விமான மார்க்கம் - இந்தூர் விமான நிலையத்தில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் உஜ்ஜைன் அமைந்துள்ளது.

ரயில் மார்கம் - முக்கியமான ரயில் நிலையங்களில் இருந்து உஜ்ஜைனுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சாலை மார்கம் - இந்தோரில் இருந்து 55 கி.மீ. தூரத்திலும், போபாலில் இருந்து 180 கி.மீ. தூரத்திலும் உஜ்ஜைன் அமைந்துள்ளது.


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை!

இந்த ராசிக்காரர்கள் வியாபார முயற்சிகள் பலன் தரும்! - இன்றைய ராசி பலன் (09.01.2025)!

கல்யாண வரம் வேண்டுமா? கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்..!

இந்த ராசிக்காரர்கள் பணப்புழக்கம், பழக்க வழக்கங்களில் கவனம் தேவை! – இன்றைய ராசி பலன்கள்(08.01.2025)!

Show comments