புத்தக வெளியீட்டு விழா

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2009 (11:21 IST)
சென்னை பிராட்வேயில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் எழுத்தாளர் எம்.தேவிசந்திரா எழுதிய பாரதி கண்ட சமுதாயமும், பாவேந்தர் தந்த பைந்தமிழும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயச்சந்திரன் ‌நிக‌ழ்‌ச்‌சியை‌த் தலைமை தாங்கி‌ப் பேசினார். சேது பாஸ்கரா மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் கொன்றைவேந்தன் ‌நி‌க‌ழ்‌ச்‌சி‌க்கு முன்னிலை வகித்தார்.

பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் புத்தகத்தை வெளியிட, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் பொது மேலாளர் வி.சீனிவாசன் அதனை‌ப் பெற்றுக் கொண்டார்.

முடிவில் தேவிசந்திரா ஏற்புரை வழங்கினார். விழாவையொட்டி, இன்றைய சூழல் மாணவ சமுதாயத்திற்கு பக்குவமா? பாதிப்பா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெ‌ற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments