Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ற்றோ‌ரி‌ன் ‌க‌ண்டி‌ப்பா‌ல் முறைதவறு‌ம் குழ‌ந்தைக‌ள்

Webdunia
புதன், 4 நவம்பர் 2009 (12:39 IST)
பெ‌ற்றோ‌ரி‌ன் அ‌தீத க‌ண்டி‌ப்பா‌ல் ‌சில குழ‌ந்தைக‌ள் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவது‌ம், தவறான பாதை‌யி‌ல் செ‌ல்வது‌ம் த‌ற்போது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. குழ‌ந்தைக‌ளிட‌ம் க‌ண்டி‌ப்பாக இரு‌க்க வே‌ண்டியதுதா‌ன். ஆனா‌ல் எடு‌த்தத‌ற்கெ‌ல்லா‌ம் கோப‌ப்படுவது ‌மிகவு‌ம் தவறு எ‌ன்று இ‌ந்த ச‌ம்பவ‌ம் உண‌ர்‌த்‌தியு‌ள்ளது.

செ‌ன்னை பெர‌ம்பூ‌ர் ‌ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் வெகு நேர‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த இர‌ண்டு ‌சிறுவ‌ர்களை அ‌ங்‌கிரு‌ந்த ஆ‌ட்டோ ஓ‌ட்டுந‌ர்க‌ள் அழைத‌்து ‌‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌‌தி‌ல், அ‌ந்த ‌சிறுவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்டதாக‌வு‌ம், கட‌த்த‌ல்கார‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து த‌ப்‌‌பியதாகவு‌ம் கூ‌றியதா‌ல் உடனடியாக அவ‌ர்களை காவ‌ல்‌நிலைய‌‌த்‌தி‌ல் ஒ‌ப்படை‌த்தன‌ர்.

செ‌ம்‌பிய‌ம் கா‌வ‌ல்‌நிலைய அ‌திகா‌ரிக‌ள் அ‌ந்த ‌சிறுவ‌ர்களை ‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌தி‌ல் அவ‌ர்க‌ள் மு‌‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌ன் முரணாக‌ப் பே‌சியதா‌ல், உ‌ண்மையை‌க் கூறு‌ம்படி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

அத‌‌ற்கு அ‌ந்த ‌சிறுவ‌ர்க‌ள், த‌ங்களது உ‌ண்மையான ‌விவர‌த்தை அ‌‌ளி‌த்த‌ன‌ர், ஒருவ‌ன ் சதீஷ் (வயது 13), ம‌ற்றவ‌‌ன ் சந்தோஷ் (வயது 8) என்பதும் அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இ‌தி‌ல் ச‌தீஷ‌் கூறுகை‌யி‌ல், நா‌ன் பெங்களூர் அக்ரஹாரம் 5-வது தெருவில் வசித்து வருகிறேன். என் அப்பா சுரேஷ் மிகவும் கண்டிப்பானவர். என்ன செய்தாலும் கோபப்படுவார். வீட்டை விட்டு விளையாட சென்றாலும் திட்டுவார்.

நேற்று முன்தினம் எங்கள் வீட்டு முன்பு பக்கத்து வீட்டு சிறுவன் சந்தோஷ்டன் காற்றாடி விட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே அப்பாவின் நண்பர் சந்திரன் வந்தார். அவர் என்னிடம், நீ காற்றாடி விட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாயா? உன் அப்பாவிடம் சொல்கிறேன் என்றார். இதைக்கேட்டதும் எனக்கு பயம் ஏற்பட்டது. பயத்தில் பக்கத்து வீட்டு பையன் சந்தோஷுடன் சென்னைக்கு ரெயில் ஏறி வந்து விட்டேன். இ‌ங்கே எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று தெ‌ரியாம‌ல் மு‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து வ‌ந்தோ‌ம் எ‌ன்று சொ‌ன்னா‌ல் அ‌ப்பா ‌தி‌ட்டுவா‌ர் எ‌ன்று பய‌ந்து, எங்களை யாரோ கடத்தி வந்து விட்டார்கள் என்று பொய் சொன்னோம். இதை அப்பாவிடம் சொல்லி விடாதீர்கள் எ‌ன்று கூ‌றி அழுதா‌ன்.

உடனடியாக குழ‌ந்தைகளு‌க்கு உணவு கொடு‌க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்களு‌க்கு அ‌றிவுரை‌க் கூற‌ப்ப‌ட்டது. அவ‌ர்களது ‌பெ‌ற்றோ‌ர்களு‌க்கு‌ம் ‌விவர‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

குழந்தைகளை அன்புடன் நடத்த வேண்டும். இல்லையென்றால் இது போல் குழந்தைகள் வழி தவறி செல்வது உண்டு. பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையையும், தவறான பாதைக்கும் அவர்களை அழைத்து செல்கிறது. பெங்களூரில் இருந்து வந்து கடத்தல் நாடகம் ஆடிய மாணவர்களிடம் போதுமான அறிவுரைகளை சொல்லியிருக்கிறோம். அவர்களின் பெற்றோர்கள் வந்தவுடன் இது குறித்து அவர்களிடமும் நாங்கள் பேசுவோம் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments