Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்புப் பார்வை - குழந்தைகள் தினம்

Webdunia
நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தை வேறு பாணியில், சாச்சா நேரு என்று குழந்தைகள் மகிழ்ச்சியோடு கூறி வருகிறார்கள். அதாவது மறைந்த பாரத பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு, பச்சிழம் குழந்தைகள் மீது எத்தனை பாசமும் பரிவும் நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பதை நினைவூட்டிடும் வகையில், அவர் மறைவுக்குப்பின் இந்த நாள் வரை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். அந்த தினம் தான் நவம்பர் 14-ம் நாள்.

மறைந்த நேரு அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால் இந்த இளம் குழந்தைகள் சரியான முறையில் போதிக்கப்படவேண்டும் என்ற விஷயத்திலும் ஆர்வம் காட்டினார்.

அவர் வாழ்ந்த காலம் கடந்து போயிற்று. ஆனால் இன்றைய சுற்றுப்புற சூழ்நிலையில், தோன்றுகின்ற, வாழ்ந்து வருகின்ற குழந்தைகள் விசித்திரமான மன நிலையை, ஆர்வங்களை கொண்டு இருப்பதால் பெற்றோர்களுக்கு இது ஒரு சவாலாக தோன்றுகிறது. இருப்பினும் குழந்தைகள் தினத்தைக் குறிக்கும் இம்மாதத்தில் குறிப்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் சில வினாடிகள் கூர்மையாக கவனித்துக் கொண்டு அதன்பின் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடதிட்டங்கள், போதிக்கும் முறைகள் என்பதை தீர்மானித்துக் கொண்டால், அந்த சிறப்பான அணுகுமுறைதான் இன்றைய தலைமுறையினருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான சாதனைகளை நிகழ்த்தவும் சுபிக்ஷமான வாழ்க்கை வாழ்ந்து காட்டவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அந்தந்த பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளின் ஜாதகத்திலும் புதன் - சந்திரன் மற்றும் சூரியன் - புதன் - சந்திரன் இணைப்புகள் இருக்கப்பெற்று விட்டால் அவர்களுக்கெல்லாம் இயல்பான ஞானங்கள், திறமைகள் பெற்று இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி கொள்ளவேண்டும். இவர்கள் எல்லாம் ஆலோசனை தருவதிலும் உபதேசம் செய்வதிலும் திறமையாக செயல்படுவார்கள் என்பதை அனுபவம் சுட்டி காட்டுகிறது.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments