Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரிக்கும் தட்டான் பூச்சி

Webdunia
கிராமங்களில் பொதுவாக தட்டான் பூச்சி என்றும், நகரப் பகுதிகளில் தும்பி என்றும் கூறப்படும் பூச்சிகள் அவைகளுக்கு உரிய சிறிய முகத்தில் புன்னகை பூக்குமாம்.

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போன் கேமராவில் தட்டான் பூச்சியை படம் பிடித்துள்ளார். அதனை ஆய்வு செய்த பிரிட்டிஷ் தும்பி ஆய்வு அமைப்பு தட்டான் சிரிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் பூச்சியின் வாய்ப் பகுதிக்கு மேற்புறம் தலையில் உள்ள ஃப்ரான்ஸ் என்ற இடத்தில் இருந்து மகிழ்ச்சி தோன்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

webdunia photoWD
நாட்டிங்ஹாமைச் சேர்ந்த மார்க் மேன்டர்ஸ் என்பவர் வண்ணங்களுடன் கூடிய தும்பி ஒன்றைப் பார்த்துள்ளார். அந்தப் பூச்சி ஒரு பாறையின் மீது ஏறிக் கொண்டிருந்த போது அவர் அதனை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

மிகப்பெரிய அளவில் காணப்பட்ட அந்த பூச்சியைப் பார்த்து மலைத்துப் போன மார்க், அந்தப் பூச்சி முட்டையிடுவதையும் அறிந்துள்ளார்.

தனது செல்போன் கேமிரா மூலம் அவர், அந்த தும்பியைப் பார்த்த போது ஒரு கரடி போன்ற உருவத்தில் காணப்பட்டதாகவும், மலைப்புடன் தாம் அதனை படம் பிடித்ததாகவும் மார்க் கூறினார்.

சதர்ன் ஹாக்கர் வகையைச் சேர்ந்த அந்த தும்பியின் படத்தை ஆய்வு செய்த பிரிட்டிஷ் அமைப்பு, அது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போது புகை‌ப்பட‌ம் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியது.

பொதுவாக தோட்டங்களை ஒட்டியுள்ள குளங்களில் 20 முதல் 30 வரை இந்த வகை தும்பிகள் காணப்படும் என்பதால், அதிக எண்ணிக்கையில் இவை இருக்கக் கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

சரிங்க.. தும்பி கூட சிரிக்கத் தெரிந்திருக்கிறது. நீங்களும் எப்போதும் வாய் விட்டுச் சிரியுங்க...

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments